டெல்லியில் சிறுமிகளை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன் கைது!!

Read Time:1 Minute, 49 Second

41a2c699-7cd3-4c91-998b-c662e39d7d27_S_secvpfடெல்லியில் தொடர்ந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 16 வயது சிறுவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் தென்கிழக்கு டெல்லியில் உள்ள அமர் காலனி பகுதியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் குற்றவாளி குறித்து அளித்த அடையாளங்களை வைத்து காவல் துறையினர் ஒரு வரைபடத்தை தயார் செய்தனர். பின்னர் சம்பவ இடங்களில் அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமாராவில் பதிவாகியிருந்த வீடியோக்களை ஆய்வு செய்தனர். அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியை ஒரு 16 வயது சிறுவன் அழைத்து சென்றது தெரிந்தது.

மற்றொரு சிறுமியிடம் விசாரித்தபோது அவரும் இதே அடையாளங்களை சொன்னதால், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிறுவன் போதை பழக்கத்தில் இருந்து விலகுவதற்காக மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்துள்ளார், தீபாவளிக்கு வீடு திரும்பிய அச்சிறுவன் இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய காதல் முத்தம் வலைத்தளம் முடக்கம்!!
Next post தண்டவாளத்தில் காதல் களியாட்டம்: ரெயிலை நிறுத்தி காதல் ஜோடியை துரத்திப்பிடித்த ரெயில் டிரைவர்!!