குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்த மாமனாரை சுட்டுக் கொன்ற மருமகன்!!

Read Time:1 Minute, 26 Second

c2babd88-f7bd-4a46-810c-56b10b87b0c8_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் உள்ள டங்ரோல் கிராமத்தைச் சேர்ந்தவர், பயாஸ். இவரது மகள் சாய்ரா பேகம் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெற்றோரின் வீட்டுக்கு வந்து இங்கேயே தங்கியுள்ளார்.

இதனால் மனைவியின் மீது ஆத்திரமாக இருந்த சாய்ரா பேகத்தின் கணவர் குல்சார், நேற்று கோபம் தணிந்து மாமனாரின் வீட்டுக்கு வந்தார். தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அவர் அழைத்தார். அவருடன் செல்ல சாய்ரா பேகம் மறுத்து விட்டார்.

பயாசும் தனது மகளை குல்சாருடன் அனுப்ப முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால், ஆவேசமடைந்த குல்சார் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, மாமனார் பயாசை நோக்கி சரமாரியாக சுட்டார்.

குண்டடிபட்டு சுருண்டு விழுந்த பயாஸ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தப்பியோடிய கொலையாளியை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை கற்பழித்து கைவிட்ட போலீஸ்காரருக்கு 10 ஆண்டு கடுங்காவல்!!
Next post அரியலூர் அருகே வேலைக்கு சென்ற மனைவியை கடத்திய கணவர்!!