வீட்டை வாடகைக்கு எடுத்து புதுப்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவர்!!

Read Time:2 Minute, 20 Second

dae84d81-0d09-4c6f-a473-2f0489fd6b71_S_secvpfவிழுப்புரம் வி.மருதூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 25). இவருக்கும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த லீலாவதி (வயது 24, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்கள் விழுப்புரம் கே.கே.ரோடு மணி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். அந்த வீட்டிற்கு வாலிபர்கள் அடிக்கடி வந்து சென்றனர். அங்கு விபசாரம் நடப்பதாக விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிக்கு புகார் வந்தது.

இதையடுத்து நேற்று அவர் போலீசாருடன் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார். அப்போது அந்த வீட்டில் லீலாவதியுடன் வி.மருதூர் மகாபாரத தெருவை சேர்ந்த வாலிபர் ராமராஜன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதையொட்டி லீலாவதியையும், ராமராஜனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் புதுப்பெண் லீலாவதியை அவரது கணவர் கோபிநாத்தே விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கோபிநாத்தையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். ராமராஜனும், கோபிநாத்தும் விழுப்புரம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். லீலாவதி சென்னையில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

திருமணமான 3 மாதத்திலே மனைவியை கணவன் விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்டவாளத்தில் காதல் களியாட்டம்: ரெயிலை நிறுத்தி காதல் ஜோடியை துரத்திப்பிடித்த ரெயில் டிரைவர்!!
Next post உடன்குடி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை!!