தண்டவாளத்தில் காதல் களியாட்டம்: ரெயிலை நிறுத்தி காதல் ஜோடியை துரத்திப்பிடித்த ரெயில் டிரைவர்!!

Read Time:4 Minute, 15 Second

34தண்டவாளத்தில் காதல் களியாட்டத்தில் ஈடுபட்ட ஜோடியை ரெயிலை நிறுத்தி விரட்டி பிடித்து ஸ்ரீரங்கம் போலீசில் ரெயில் டிரைவர் ஒப்படைத்தார்.

சினிமாவின் பிரதானம் காதல். இந்த காதலை திரைப்படங்களில் வெளிப்படுத்தும் இடங்களுக்கு வரைமுறை கிடையாது. அதில் வீதி முதல் கோவில் வரையிலும் தங்கள் காதலை அரங்கேற்றும் காட்சிகள் இடம்பெறுகின்றன.

சினிமாவில்தான் இக்காட்சிகள் வருகிறது என்றால் அதனை பார்க்கும் இளைஞர் பட்டாளங்களும் தற்போது அதுபோன்றே காதல் அரங்கேற்றத்தை பொது இடங்களில் நடத்தி குதூகலம் அடைகின்றனர். பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பொது மக்களின் கண்களை கூசச்செய்யும் வகையிலும் நடந்து வருகிறது.

அப்படி ஒரு சம்பவம்தான் திருச்சி அருகேயும் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:–

விருத்தாசலத்திலிருந்து திருச்சிக்கு பயணிகள் ரெயில் வந்து செல்கிறது. இந்த ரெயில் வரும்போதெல்லாம் திருச்சி பக்கம் உள்ள உத்தமர்கோவில்–பிச்சாண்டார் கோவில் அருகே தண்டவாள பகுதியில் காதல் ஜோடியினர் காதல் களியாட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனை பார்க்கும் ரெயில் டிரைவர் உரக்க சத்தத்துடன் ஒலி எழுப்பி அவர்களை தண்டவாள பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி ரெயிலை ஓட்டி வருவது அன்றாட நிகழ்வாக இருந்து வந்துள்ளது.

இப்படி இளைஞர்கள் பட்டாளம் கவனக்குறைவுடன் தண்டவாள பகுதியில் செய்யும் சில்மிஷங்களால் அவர்களது உயிருக்கு மட்டுமல்லாமல் பலரது வேலைக்கும் பலரது பயணத்திற்கும் வேட்டு வைக்கிறது என்றால் அது உண்மைதான்.

இந்த நிலையில் இன்று விருத்தாசலத்திலிருந்து திருச்சிக்கு பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட உத்தமர்கோவில்– பிச்சாண்டார் கோவில் இடையே ரெயில் வந்தபோது வழக்கம்போல் தண்டவாளத்தில் ஜோடி ஜோடியாக காதலர்கள் வலம் சென்றனர்.

இதனைக் கண்டதும் ரெயில் டிரைவர் கொதித்து எழுந்தார். இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணிய அவர் திடீரென ரெயிலை நிறுத்தினார். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கி ஓடி காதலர்களை பிடிக்க முயன்றார்.

நின்ற ரெயிலில் இருந்து சிலர் ஓடிவருவதை கண்ட காதலர்கள் தண்டவாள பகுதியிலிருந்து தலைதெறிக்க ஓடினார்கள். இந்த முயற்சியில் டிரைவரின் கையில் ஒரு காதல் ஜோடி சிக்கியது. அவர்களுக்கு புத்தி புகட்டும் விதமாக ஆலோசனைகள் கூறியதோடு ரெயிலில் அவர்களை ஏற்றி ஸ்ரீரங்கம் அழைத்து வந்தார். அங்கு போலீசாரிடம் காதல் ஜோடியினரை ஒப்படைத்த ரெயில் டிரைவர் இதற்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இளஞ்ஜோடிகள் என்பதால் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெயரை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். பெண்ணை புத்தி கூறி அனுப்பிவைத்த ஸ்ரீரங்கம் போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லியில் சிறுமிகளை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன் கைது!!
Next post வீட்டை வாடகைக்கு எடுத்து புதுப்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவர்!!