சாத்தான்குளம் அருகே வியாபாரிக்கு கொலை மிரட்டல்: தம்பதிக்கு வலைவீச்சு!!

Read Time:1 Minute, 27 Second

ac36eda2-7151-4f70-a80d-ce6ebf204912_S_secvpfசாத்தான்குளம் அடுத்த முதலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது45). தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜாசிங் (43) என்பவர் கடந்த 2013ம் ஆண்டு ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்யலாம் என்று கூறி ரூ.2 லட்சம் வாங்கினாராம். ஆனால் பல மாதங்களாகியும் ராஜாசிங் நம்பிராஜனிடம் கூடுதல் பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.

இதையடுத்து நம்பிராஜன் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது ராஜாசிங், அவரது மனைவி லதா ஆகிய இருவரும் சேர்ந்து நம்பிராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நம்பிராஜன் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் நம்பிராஜன் சாத்தான்குளம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்குப்பதிவு செய்து ராஜாசிங் அவரது மனைவி லதா ஆகிய இருவரையும் தேடி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலனால் கர்ப்பமான கோவை பள்ளி ஆசிரியர்: திருமணத்துக்கு மறுத்ததால் போலீசில் புகார்!!
Next post சங்கரன்கோவிலில் மனைவியை தாக்கிய வங்கி மேலாளர் கைது!!