காதலனால் கர்ப்பமான கோவை பள்ளி ஆசிரியர்: திருமணத்துக்கு மறுத்ததால் போலீசில் புகார்!!

Read Time:3 Minute, 2 Second

0b7f48d9-0de8-41e9-9a53-ea1bf4c8c588_S_secvpfகோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் வனிதா(வயது 26). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரி யையாக வேலைபார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் வனிதா ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

எனது சொந்த ஊர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி. நான் தற்போது கோவை ரத்தினபுரியில் எனது தாயாருடன் வசித்து வருகிறேன்.

அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறேன். நான் கோவை ராமநாதபுரத்தில் நடைபெற்ற எனது தோழியின் திருமணத்துக்கு சென்றேன்.

அப்போது கோவை ராமநாதபுரம் பாரதிநகரைச் சேர்ந்த அருண் சங்கர்(30) என்பவர் அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக பழகினோம். கடந்த 2.7.13 அன்று அருண்சங்கர் என்னை காதலிப்பதாக கூறினார்.

‘உன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன், என்னை முழுமையாக நம்பு’ என்றார். அவரது உறுதிமொழியை நம்பினேன். பல இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்றார்.

கடந்த 4.2.2014 முதல் 16.7.2014 வரையிலான இடைப்பட்ட காலத்தில் என்னை கோவை கொடிசியா பகுதிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். அதன் காரணமாக நான் கர்ப்பமானேன். ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன், என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்றேன்’ அதற்கு அவர் தற்போது திருமணம் வேண்டாம். பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன். இப்போது கர்ப்பத்தை கலைத்து விடு என்றார்.

பின்னர் சிங்காநல்லூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று எனது கர்ப்பத்தை கலைத்தார். ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் இந்த பெண் எனது மனைவி என்று கூறினார். அருண்சங்கரின் பேச்சை நம்பிய நான் கர்ப்பத்தை கலைக்க சம்மதித்தேன்.

இப்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னுடன் சேர்த்து வைக்க வேண்டுகிறேன். மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. வனிதாவின் புகார் மனு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவி உதவியுடன் 59 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்!!
Next post சாத்தான்குளம் அருகே வியாபாரிக்கு கொலை மிரட்டல்: தம்பதிக்கு வலைவீச்சு!!