பிரித்தானியாவில் “விந்து வங்கி” தொடக்கம்!!

Read Time:1 Minute, 30 Second

sperm_bank_002பிரித்தானியாவில் கர்ப்பமடைய முடியாத பெண்களுக்கு உதவ விந்து வங்கி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் குழந்தை பெற ஆசைப்படும் பெண்களுக்கும், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் உதவும் வகையில் தேசிய சுகாதார சேவை பிர்மிங்காமில்(Birmingham) விந்து வங்கி ஒன்றை தொடங்கியுள்ளது.

இந்த விந்து வங்கியில் தேசிய சுகாதார சேவை நோயாளிகளும், மற்ற தனியார் நோயாளிகளும் கருத்தரிப்பு சிகிச்சை செய்து கொள்ளலாம்.

மேலும் கருத்தரிக்க விரும்பும் பெண்கள் இணையதளத்தில் ஆண்களின் உயரம், தலை முடி நிறம், இனம் என அனைத்தையும் தெரிந்து கொண்டு தங்களுக்கு தேவையானவற்றை தெரிவு செய்து கொள்ளலாம்.

இதற்கு 300 முதல் 400 பவுண்ட்ஸ் செலவாகும் என்றும், தேசிய சுகாதார மையத்தின் மூலமாக வரும் பெண்களுக்கு கட்டணங்கள் ஏதும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் ஆறு தம்பதிகளில் ஒருவருக்கு குழந்தையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாங்குநேரியில் வீட்டு முன் நின்ற பெண் வெட்டி சாய்ப்பு: அண்ணன் –தம்பி வெறிச்செயல்!!
Next post ப்ரியா ஆனந்த் அப்படிச் செய்யவில்லையாமே?