காட்பாடியில் கள்ளத்தொடர்பு வைத்த தாய் வெட்டிக்கொலை: மகன் கைது!!

Read Time:2 Minute, 23 Second

6ff87152-a9b7-4b2e-b1cf-b738859a6af4_S_secvpfவேலூர் மாவட்டம் காட்பாடி பாறைமேட்டு பகுதியை சேர்ந்தவர் பொன்னன். சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி விஜயா (வயது 44). இவர்களது மகன் வினோத்குமார் (23), கட்டிட மேஸ்திரியாக உள்ளார்.

வினோத்குமாரின் சித்தப்பா முருகன் (40). கார் டிரைவர். திருமணமான இவர் தற்போது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். முருகனுக்கும், விஜயாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த வினோத் குமார், சித்தப்பாவுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி தாய் விஜயாவிடம் பலமுறை கூறியுள்ளார்.

ஆனால் விஜயா கைவிட மறுத்துள்ளார். இதனால் தாய் மீது வினோத்குமார் ஆத்திரத்தில் இருந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் விஜயா உள்பட அனைவரும் படுத்து தூங்கினர். அப்போது தாய் மீது ஆத்திரத்தில் இருந்த வினோத்குமார் இன்று அதிகாலை 1.30 மணியளவில் தாய் விஜயாவை கத்தியால் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் விஜயா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இக்கொலை சம்பவம் குறித்து தகலறிந்த காட்பாடி டி.எஸ்.பி மதிவாணன், இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் விரைந்து சென்று வினோத்குமாரை கைது செய்தனர்.

பின்னர் விஜயாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்தப்பாவிடம் கள்ளத்தொடர்பு வைத்த தாயை மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ப்ரியா ஆனந்த் அப்படிச் செய்யவில்லையாமே?
Next post த்ரிஷா – ராணா பிரிவுக்கு நானா காரணம்? நடிகை காட்டம்!!