(PHOTOS) புடினுக்குப் போட்டியாக மேலாடை இல்லாமல் குதிரை சவாரி செய்த நடிகை!!

Read Time:2 Minute, 51 Second

31-1414743605-putin-chelsea-600லாஸ் ஏஞ்சலெஸ்: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினின் ஆணாதிக்க குணத்தைக் கிண்டலடிக்கும் வகையில் புடினைப் போலவே மேலாடை இல்லாமல் குதிரை மீது சவாரி செய்து அந்தப் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருந்தார் அமெரிக்க காமெடி நடிகை செல்சீ ஹேன்ட்லர்.

ஆனால் இந்தப் படத்தை அனுமதிக்க முடியாது என்று கூறி இன்ஸ்டாகிராம் அதைத் தூக்கி விட்டது. பெண்கள் குறித்து புடின் முன்பு தெரிவித்த கருத்துக்கள் ஆபாசமானவை, செக்ஸியானவை, ஆணாதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துபவை என்று செல்சீ குறை கூறியுள்ளார்.

குறிப்பாக முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் மிகவும் பலவீனமானவர் என்று புடின் முன்பு கூறியதையும் விமர்சித்துள்ளார் செல்சீ. இதற்குப் பதிலடியாக ஒரு காரியத்தை செய்துள்ளார் செல்சீ. முன்பு புடின் மேலாடை இல்லாமல் குதிரையில் சவாரி செய்வது போன்ற புகைப்படம் வெளியாகியிருந்தது.

தற்போது அதைக் கிண்டலடித்து செல்சீயும் ஒரு போட்டோவைப் போட்டுள்ளார். ஒரு குதிரை மீது மேலாடை இல்லாமல் செல்சீ அமர்ந்து சவாரி செய்வது போல அந்தப் படம் உள்ளது. அதை இன்ஸ்டாகிராமில் அவர் போட்டிருந்தார். அதில், ஒரு ஆண் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றால், அதை செய்யும் உரிமை பெண்களுக்கும் உண்டு.
31-1414743585-putin-600

31-1414743595-chelsea-600
அதை விட சிறப்பாகவும் செய்வோம் #kremlin’ என்று அதில் செல்சீ கூறியிருந்தார். ஆனால் இந்தப் படத்தை தடை செய்து விட்டது இன்ஸ்டாகிராம். இதை அனுமதிக்க முடியாது என்று அது கூறியுள்ளது. இதற்கு செல்சீ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது செக்ஸிஸ்ட் போக்காகும் என்று அவர் கூறியுள்ளார். புடினை விட நான் சிறந்தவள், சிறந்த உடலமைப்பு கொண்டவள் என்பதை நிரூபிக்க எனக்கு உரிமை உள்ளது. அதை இன்ஸ்டாகிராம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுளைவதில் சட்டவிரோத குடியேறிகளுக்கு சிக்கல்!!
Next post இதுவரை ஐந்து சடலங்கள் மீட்பு!!