மீறியபெத்தை தோட்ட மக்களுக்கு அமெரிக்கா 6.5 மில்லியன் நிதி உதவி!!

Read Time:3 Minute, 47 Second

672007615usaகொஸ்லாந்த பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களின் உடனடித் தேவைகள் எட்டப்படும் வகையில், அவசர மனிதநேய உதவியாக 6.5 மில்லியன் ரூபாய்களை (50,000 அமெ. டொலர்கள்) அமெரிக்கா வழங்கியுள்ளது.

இது தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில்,

மிக அவசரமாக தேவையாகவுள்ள பொருட்களினை அளிப்பதற்கான ஒழுங்குப்படுத்தலில் இலங்கையின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மற்றும் வேறு சர்வதேச உதவி பங்காளர்களுடன் இணைந்து சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றது.

போர்வைகள், படுக்கைகள், ஆடைகள், சுகாதாரப் பொதிகள், மற்றும் பாதணிகள் போன்ற அவசரகால உணவுசாராப் பொருட்கள், சிறுவர்களுக்கான கல்வி உபகரணங்கள், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்சி பெறுவதற்கு உதவும் வகையில் சிறுவர்களுக்கான உளவளத் துணை சேவைகள் மற்றும் உளவியல் முதலுதவி வழங்குவதற்கு இந்த அமெரிக்க உதவியானது வேர்ல்ட் விஷன் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகளின் விரிவான முயற்சிகளுக்கு இந்த உதவியினை எந்தளவு சிறப்பாக கொண்டு சேர்ப்பது என்பதனை தீர்மானிப்பதில் அமெரிக்க தூதரகமானது தொடர்ந்து அவர்களுடன் ஒருங்கிணைப்பினை ´கொஸ்லாந்த பிரதேசத்தில் உள்ள குடும்பங்களும், சமூகங்களும் மண்சரிவு அனர்த்தத்தில் இருந்து மீட்சிப் பெறுவதற்கு உடனடியான மற்றும் நீண்ட கால உதவி தேவையாக இருக்கும் என்பதனை நாம் அறிவோம்.´ என அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜெ சிசன் கூறினார்.

´களத்தில் மிகவும் உடனடியாக தேவைப்படுவன என தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் அடையாளம் காணப்பட்ட பொருட்களையே, இன்று அறிவிக்கப்பட்ட அமெரிக்க உதவித்தொகை வழங்கும். இந்த நிதியுதவியானது பாதிக்கப்பட்ட ஆயிரம் சிறுவர்களுக்கும், குடும்பங்களுக்கும் உதவியளிக்கும்.

எமது முழுமையான ஆதரவினை நாம் தொடர்ந்து வழங்குவோம்´ என அவர் மேலும் குறிப்பிட்டார். அண்மைய மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், அரசாங்கத்திற்கும், இலங்கை மக்களுக்கும் வொஷிங்டன் டீ.சீயில் அமைந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்திருந்தது.

´இலங்கை அரசாங்கத்தினதும், அதன் படையினரதும் துரிதமான பிரதிபலிப்புகள் மற்றும் துணிவுடனான தேடுதல், மீட்புப் பணிகளை நாம் பாராட்டுகின்றோம்´ என இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் ஜென் சாக்கி தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகளின் குதிரையேற்ற பயிற்சிக்காக பில்கேட்ஸ் வாங்கிய பங்களா!!
Next post மீறியபெத்த மண்சரிவு – மற்றொரு சடலம் மீட்பு!!