இறந்த சினை ஆட்டின் வயிற்றில் மனித தலை போன்று இருந்த அதிசய ஆட்டு குட்டி!!

Read Time:1 Minute, 48 Second

08927fd0-bd45-4740-845c-4c4962d265b4_S_secvpfபெருந்துறை அரசூக உள்ள சீனாபுரம் ஆயிக்கவுண்டன்பாளையம் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் கமலம்(வயது 48). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த மாதங்களுக்கு முன்பு தமிழக அரசின் 4 இலவச ஆடுகள் வழங்கப்பட்டன.

இதில் ஒரு ஆடு நிறைமாத சினையாக இருந்தது. இந்த ஆடு மிகவும் சோர்வாக படுத்து கிடந்தது. உடனே கமலம் அரசு கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த மருத்துவர் விரைந்து வந்து ஆட்டுக்கு மருந்துகள் கொடுத்தார். பின்னர் மாலைக்குள் ஆடு குட்டியை ஈன்றுவிடும் என கூறிவிட்டு சென்றார்.

ஆனால் வெகுநேரம் ஆகியும் குட்டி போடாமல் ஆடு படுத்தே கிடந்தது. பின்னர் திடீரென அந்த ஆடு இறந்துவிட்டது. இதையடுத்து கால்நடை மருத்துவர் ஆட்டை பிரேத பாசோதனை செய்தார்.

அப்போது அந்த ஆட்டின் வயிற்றுக்குள் இருந்த குட்டி ஆடும் இறந்து போயிருந்தது. அந்த குட்டியை வெளியே எடுத்து பார்த்தபோது அதன் முகம் மற்றும் உடல் அமைப்பு மனித உருவத்தை போன்று காணப்பட்டது. ஆனால் கால்கள் ஆட்டின் கால்களை போன்று இருந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அந்த அதிசய ஆட்டுக்குட்டியை ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவனின் கன்னத்தை கிள்ளிய ஆசிரியைக்கு ரூ.50000 அபராதம்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
Next post சாயர்புரம் அருகே விதவை பெண்ணை கற்பழிக்க முயற்சி: ராணுவ வீரர் கைது!!