அதிகமாக பால் குடித்தால் ஆபத்து!!

Read Time:1 Minute, 35 Second

Untitled-135தினமும், இரண்டு கிளாசுக்கு அதிகமாக பால் குடித்தால், உயிருக்கு ஆபத்து என, ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடனில் உள்ள உப்சலா பல்கலையின் பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன் இது பற்றி கூறியதாவது,

பால் குடிப்பதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து, கடந்த, 20 ஆண்டுகளாக ஆய்வு நடத்தினோம். 61 ஆயிரம் பெண்கள், 45 ஆயிரம் ஆண்களிடம் இந்த ஆய்வை நடத்தினோம்.

இதில், தினமும், இரண்டு கிளாசுக்கும் அதிகமாக, அதாவது, அரை லிட்டர் அல்லது அதற்கு அதிகமாக பால் குடிப்போருக்கு, பல்வேறு பாதிப்பு ஏற்பட்டு, விரைவிலேயே உயிரிழப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது.

குறைவாக பால் குடிப்போரை விட, அதிகமாக பால் குடிப்போர், மிக விரைவாக உயிரிழப்பதையும் எங்கள் ஆய்வில் உறுதி செய்துள்ளோம். பாலில் கலந்திருக்கும், ‘லக்டோஸ் மற்றும் கிளாக்டோஸ்’ என்ற பொருட்கள் (சர்க்கரை தன்மை) காரணமாக, பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுவதாக எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல நடிகை காதலருடன் கைது!!
Next post பெண்ணுக்கு ஏற்படும் தொல்லை பற்றிய வீடியோவில் நடித்தவருக்கு மிரட்டல்!!