கலாச்சார காவலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் 2-ம் தேதி முத்தத் திருவிழா!!

Read Time:2 Minute, 47 Second

db55e4e3-de96-41c9-b71e-2717a9b69ac1_S_secvpfஇந்திய கலாச்சாரத்தை இளம் தலைமுறையினர் சீரழித்து வருவதாக குற்றம்சாட்டும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சமீபத்தில் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ஒரு புதிய ஓட்டலை அடித்து, உடைத்து, துவம்சப்படுத்தினர்.

அந்த ஓட்டலில் இளம்வயது ஆண்களும், பெண்களும் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டதால், நாங்கள் தலையிட நேர்ந்தது என தாக்குதல் நடத்தியவர்கள் தெரிவித்தனர்.

இந்த காட்சிகளை அந்த அரசியல் கட்சிக்கு எதிராக செயல்பட்டுவரும் ஒரு கட்சிக்கு சொந்தமான தொலைக்காட்சி சேனல் கடந்த 23-ம் தேதி ஒளிபரப்பியதையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

கலாச்சார பாதுகாவலர்கள் என்ற போர்வையில் சட்டம்-ஒழுங்கை சிலர் தங்களது கையில் எடுத்துக் கொண்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதை ஆதரித்தும், கண்டித்தும் கேரள மக்களிடையே பரபரப்பான பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வரும் நவம்பர் 2-ம் தேதி, மாலை 5 மணியளவில் கொச்சி நகரில் உள்ள கடற்கரையோர உணவகம் ஒன்றின் பொதுவெளியில் ஆணோடு பெண்கள் கட்டியணைத்து, முத்தமிடும் திருவிழாவுக்கு ‘ஃபேஸ்புக்’ மூலம் ஒரு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

’கிஸ் ஆஃப் லவ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ‘ஃபேஸ்புக்’ பக்கத்தில் இதுவரையில் 2,722 பேர் உறுப்பினராக இணைந்துள்ளனர். 8,510 பேர் ‘லைக்’ தெரிவித்துள்ளனர். இதே நாளில் கோழிக்கோடு, திரிச்சூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலும் இந்த ‘முத்தத் திருவிழா’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி ‘டுவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் வேகமாக பரவி வருகின்றது. கேரளாவின் இதர பெருநகரங்களிலும் இதைப்போன்ற முத்தத் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனவும் இந்த அமைப்பினர் கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 16அங்குல இடையுடன் வலம் வரும் மொடல் அழகி (படங்கள், வீடியோ)
Next post விஜயால் அவதியுறும் ஆசிரியர்!