உலக கோப்பை கால்பந்து: கானாவை தோற்கடித்து பிரேசில் கால் இறுதிக்கு தகுதி

Read Time:4 Minute, 32 Second

Foot.Brasil2.jpg18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதன் 2-வது சுற்று நாக்-அவுட் போட்டியில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் `எப்’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரேசில் அணி, `இ’ பிரிவில் 2-வது இடம் பிடித்த கானாவை சந்தித்தது. இந்த ஆட்டம் டார்ட்முன்டில் நடந்தது. பிரேசில் அணி தனது லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவையும், 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும், 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் தோற்கடித்து இருந்தது. கானா அணி 0-2 என்ற கோல் கணக்கில் இத்தாலியிடம் தோல்வி கண்டது. ஆனால் அடுத்த ஆட்டங்களில் 2-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசையும், 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. முதல் முறையாக உலக கோப்பையில் விளையாடும் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த கானா இந்த ஆட்டத்தில் பிரேசிலுக்கு கலக்கத்தை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5 முறை சாம்பியனான பிரேசில் ஆரம்பத்திலேயே கானா அணிக்கு கடும் அதிர்ச்சி கொடுத்தது. ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, கோல் கீப்பர் மற்றும் பின்கள வீரரையும் லாவகமாக ஏமாற்றி மின்னல் வேகத்தில் கோல் அடித்தார். இதனால் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னணி பெற்றது.

இதை தொடர்ந்து பதில் கோல் திருப்ப கானா அணியினர் ஆக்ரோஷமாக ஆடினார்கள். இதனால் ஆட்டம் கடும் விறுவிறுப்பாக இருந்தது. பந்து அதிக நேரம் கானா அனியினரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அந்த அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை. பலமுறை அவர்கள் எதிரணி கோல் எல்லைக்குள் ஜெட் வேகத்தில் முன்னேறினாலும் கோல் அடிக்க முடியாமல் கோட்டை விட்டனர். அந்த அணிக்கு பிரிகிக் உள்பட பல வாய்ப்புகள் கிடத்தது. ஆனால் அதனை கோலாக்க முடியவில்லை.

முதல் பாதி ஆட்டத்தில் இஞ்சுரி நேரத்தில் (46-வது நிமிடம்) பிரேசில் 2-வது கோலை அடித்தது.அந்த அணி கேப்டன் காபு கோலை நோக்கி அடித்த பந்தை கானா கோல் கீப்பர் தடுக்க முயற்சிக்கும் முன்பு பிரேசில் அணியின் மற்றொரு வீரரான அடிரியனோ பாய்ந்து அடித்து கோலாக்கினார். இதனால் முதல் பாதியில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னணி தேடியது.

பின் பாதி ஆட்டத்தில் கானா அணி தாக்குதல் ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தியதால் அந்த அணியின் தடுப்பு ஆட்டத்தில் பலவீனம் ஏற்பட்டது. ஆட்டத்தில் 84-வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் ரொப்ரடோ பந்தை வேகமாக கடத்தி சென்று கோல் கீப்பர் மற்றும் பின்கள வீரர்களை ஏமாற்றி அபாரமாக கோல் அடித்தார்.

அதன் பின்னர் இரு அணியினரும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள கைகூடவில்லை. முடிவில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. தோல்வி கண்ட கானா ஆட்டத்தில் இருந்து வெளியேறியது. பிரேசில் கோல் கீப்பர் டிடா சிறப்பாக செயல்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கால் இறுதிக்கு தகுதி பெற்றது: பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது
Next post உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்து உலக சாதனை படைத்தார் ரொனால்டோ