பால் சமத்துவ இடைவெளி பட்டியலில் இலங்கை முன்னிலை!!

Read Time:1 Minute, 37 Second

16415265831109227525report3பால் சமத்துவ இடைவெளி பட்டியலில் இலங்கை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் முதல் 10 இடங்களுக்குள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இலங்கை 79 புள்ளிகளுடன் 10ஆம் இடத்தை வகிக்கிறது. இந்தியா 19வது இடத்தை பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கான ஆண், பெண் இடையிலான பால் சமத்துவ இடைவெளி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்கீழ் உலகில் உள்ள 144 நாடுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் கல்வி, சுகாதாரம், தொழில்வாய்ப்பு, அரசியல் போன்றவற்றில் தரப்படும் இடங்கள் கருத்திற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி பங்களாதேஷ் பெண்களுக்கான முன்னுரிமையின் அடிப்படையில் 8 ஆவது இடத்தை வகிக்கிறது.

உலகளாவிய ரீதியில் ஐஸ்லாந்து முதலாம் இடத்தையும் பின்லாந்து இரண்டாம் இடத்தையும் நோர்வே மூன்றாம் இடத்தையும் சுவீடன், டென்மார்க் என்பன நான்காம் ஐந்தாம் இடங்களையும், கனடா 19 வது இடத்தையும் அமெரிக்கா 20வது இடத்தையும் பிரித்தானியா 26 இடத்தையும் பிடித்துள்ளன.

இலங்கை உலகளாவிய ரீதியில் 79 இடத்தையும் இந்தியா 114 இடத்தையும் வகிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தக்கலை அரசியல் பிரமுகரின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய தொழிலாளி மீது தாக்குதல்!!
Next post மலைநாட்டுக்கான ரயில் சேவை பாதிப்பு!!