அமெரிக்காவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்-கணக்கெடுப்பில் தகவல்!!

Read Time:2 Minute, 15 Second

4a3b73f3-2396-43e3-9386-937603d60c72_S_secvpfஅமெரிக்காவில் உள்ள மசாச்சுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 17 சதவீத பெண்களும் 5 சதவீத ஆண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரியவந்துள்ளது.

மசாச்சுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி நடத்திய கணக்கெடுப்பில் அக்கல்வி நிறுவனத்தில் படிக்கும் 11,000 மாணவர்களையும் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், 35 சதவீதம் பேர் மட்டும் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றனர். கணக்கெடுப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட முடிவுகளில் 17 சதவீத பெண்களும் 5 சதவீத ஆண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரியவந்துள்ளது.

தற்போது இருக்கும் சூழலில், மசாச்சுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி மேற்கொண்ட இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ள மனித உரிமை ஆர்வலர்கள், கணக்கெடுப்பின் மூலம் பாலியல் துன்புறுத்தலை கண்டறிந்து அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மசாச்சுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் சான்ஸலர் சிந்தியா பர்னட் கூறுகையில், ‘நாங்கள் கேட்க விரும்பாத தகவல் இந்த கணக்கெடுப்பு வாயிலாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. இதிலிருந்து மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்து தெளிவான புரிதல் இல்லை எனத் தெரிகிறது. இது மிகவும் கவலை அளிக்கிறது. மாணவர்களுக்கு மேலும் விழிப்புணர்வு அளிக்க வேண்டிய நிலையை இது உணர்த்துகிறது’ எனக் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஷாருக்கான், தீபிகா படுகோனேக்கு கொலை மிரட்டல்!!
Next post பட அதிபருடன் நடிகை காதல்?