ஏழை மீனவர்களின் படகும் உள்ளது என இப்போதுதான் சாமிக்குத் தெரிந்ததாம்!!

Read Time:3 Minute, 10 Second

181904851Untitled-1இலங்கையில் பிடிபட்டிருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளை, இலங்கை ஜனாதிபதியிடம் பேசி, மீட்டுக் கொடுப்பேன் என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று, சென்னையில் சுப்பிரமணியன் சாமியை சந்தித்து, இலங்கையில் பிடிபட்டிருக்கும், தங்கள் படகுகளை மீட்டுக் கொடுக்குமாறு கேட்டு மனு கொடுத்தனர்.

இதனையடுத்து சுப்ரமணியன் சாமி கூறியதாவது:

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, தமிழக மீனவர்களை மீட்டுக் கொடுக்கச் சொல்லி, இங்கிருக்கும் மீனவ அமைப்புகள் சில, என்னிடம் கோரிக்கை விடுத்தன. அந்த அடிப்படையில் தான், நான், இலங்கை ஜனாதிபதியிடம் பேசி, தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கேட்டுக் கொண்டேன்.

அப்போது, ´மனிதாபிமானத்தின் அடிப்படையில், மீனவர்களை விட்டு விடுகிறேன்; படகுகளை விடமாட்டேன். காரணம், படகுகள் அனைத்தும் தமிழகத்தில் இருக்கும், பண முதலாளிகளுக்கு சொந்தமானது´ என்று கூறி, சில ஆதாரங்களையும் என்னிடம் காட்டினார், மஹிந்த ராஜபக்ஷ.

அதன்பின் தான், நான் மீனவர்களை மட்டும் உடனடியாக விடுங்கள் என, கேட்டுக் கொண்டேன். அந்த அடிப்படையில், அவர் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்தார்.

அந்த படகுகளில் சில, ஏழை மீனவர்களுக்கு சொந்தமானது என, இப்போது தான் தெரியவருகிறது. அதனால், அதையும் மீட்டுக் கொடுக்க, நான் இலங்கை ஜனாதிபதியுடன் பேசுவேன்.

உடனடியாக, இந்தியாவுக்கான இலங்கை தூதரை சந்தித்து, நடவடிக்கைக்கு வலியுறுத்துவேன். மத்திய அரசின் அமைச்சர்களையும், பிரதமர் மோடியையும் சந்திப்பேன். அடுத்த மாதம் 26ம் திகதி, நிகழ்ச்சி ஒன்றுக்காக, இலங்கை செல்கிறேன்.

அப்போது, இலங்கை ஜனாதிபதியை சந்திப்பேன். இந்த பிரச்சினை குறித்து அவரிடமும் பேசி, தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க கேட்டுக் கொள்வேன்.

அதுவரையில், படகுகளை பாதுகாக்க வேண்டும் எனவும், மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைத்திருக்கின்றனர். அதையும் செய்ய, உடனடியாக ஏற்பாடு செய்வேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவாவில் கற்பழிக்கப்பட்ட ரஷியப்பெண்: மருத்துவ பரிசோதனையின் போது டாக்டரும் பாலியல் கொடுமை!!
Next post அடுத்த மாதம் மோடியை சந்திப்பாரா விக்னேஸ்வரன்?