ரகசிய திருமணம் செய்து வைக்கும் வக்கீல்கள் மீது நடவடிக்கை!!

Read Time:7 Minute, 55 Second

1629279369supremeதேனி மாவட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் பாண்டியன், சென்னையை சேர்ந்த ராம்பிரசாத் ஆகியோர் தனித்தனியாக 2 ஆள்கொணர்வு மனுக்களை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

அதில், ‘தங்களது காதலியை ராயபுரத்தில் உள்ள வடசென்னை பதிவு அலுவலகத்தில் வைத்து பதிவு திருமணம் செய்துள்ளதாகவும், தற்போது தங்களது மனைவிகளை அவர்களது பெற்றோர்கள் கடத்திச் சென்று சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர் என்றும், தங்களது மனைவிகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் கூறியிருந்தனர்.

இந்த 2 மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த ஐகோர்ட்டில் ஆள்கொணர்வு மனு என்ற பெயரில், 21 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட வாலிபர்கள் பலர் வழக்கு தொடர்கின்றனர். அதில், தனக்கு வடசென்னை பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் நடந்தது, தற்போது சட்டவிரோத காவலில் உள்ள தங்களது மனைவிகளை மீட்டுத்தர வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பெண்களை கோர்ட்டுக்கு வரவழைத்து விசாரிக்கும்போது, தங்களுக்கு திருமணமே நடக்கவில்லை. மனுதாரர்கள் யார் என்றே தெரியவில்லை என்று கூறுகின்றனர்.

அதுபோலத்தான், இந்த 2 வழக்கிலும் நடந்துள்ளது. எனவே, இதுபோன்ற சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு பதவியில் உள்ள அதிகாரியை கொண்டு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டோம்.

இதனடிப்படையில், போலீஸ் சூப்பிரண்டு எம்.வி.ஜெயகவுரி விசாரணை நடத்தி, அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், முதல் அட்டவணையில், 1-1-2013 முதல் 12-12-2013 வரை 120 வக்கீல்களின் பெயர்களை குறிப்பிட்டு, இவர்கள் ராயபுரத்தில் உள்ள பதிவு அலுவலகத்தில் 1559 காதல் ஜோடிகளுக்கு திருமணங்களை நடத்தி வைத்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

அதிலும், ஒரு வக்கீல் எத்தனை திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்தான் அதிக அளவில் திருமணம் நடந்துள்ளது. கல்வியாண்டின் இறுதி மாதங்கள் என்பதால், படிப்பை முடிக்கும் வீட்டுக்கு செல்லும் கல்லூரி காதல் ஜோடிகள் பெற்றோர்களுக்கு தெரியாமல், இந்த காலக்கட்டத்தில் திருமணம் செய்துகொள்கின்றனர் என்பது புலனாகுகிறது.

ஒரு வக்கீல் பிப்ரவரி 14-ந் திகதி, காதலர் தினத்தன்று, 16 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளார் என்று போலீஸ் அறிக்கை கூறுகிறது. 2-வது அட்டவணையில், 48 வக்கீல்கள் (பெயர்கள் குறிப்பிட்டு) ஓர் ஆண்டில் 1937 திருமணங்களை செய்து வைத்துள்ளனர் என்பதையும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இந்த திருமணங்கள் எல்லாம் முதலில் வக்கீல் அலுவலகத்தில் ரகசியமாக நடக்கிறது. இதன்பின்னர், வக்கீல் அளிக்கும் சான்றிதழ்கள் மூலம் ராயபுரத்தில் உள்ள பதிவு அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்யப்படுகிறது என்று தெரிகிறது.

வக்கீல் என்பவர்கள், நீதி பரிபாலனம் தொடர்பான பணிகளை மட்டுமே செய்ய வேண்டும். அதை தாண்டி வேறு தொழில்களை செய்யக்கூடாது. திருமணம் செய்து வைக்கும் புரோகிதர் மற்றும் வக்கீல் என்ற 2 தொழில்கள் செய்பவர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வக்கீல்கள், காதல் திருமணம் செய்து வைக்க பதிவு அலுவலகத்தில் ஆஜராகுவதை ஏற்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால், வக்கீல் தொழில் என்ற புனிதமான தொழிலின் கண்ணியத்தை அது குறைத்து விடும்.

மேலும், பதிவு திருமணம் செய்து வைக்கும் அதிகாரிகள், திருமணம் செய்துகொள்பவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்தால், அவர்களது திருமணத்தை பதிவு செய்ய மறுத்து விட வேண்டும்.

எனவே, வக்கீல் சேம்பர், வக்கீல் சங்கங்களில் அறைகளில் ரகசியமாக காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது. அவ்வாறு திருமணம் நடக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு பாதிப்பு ஏதாவது இருந்தால், அதற்கு காரணமாக வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க, அதற்குரிய கோர்ட்டை நாடலாம்.

தமிழ்நாடு பதிவு திருமணச் சட்டத்தின் கீழ், நடைபெறும் பதிவு திருமணத்தின்போது, தம்பதியர் இருவரும் நேரில் ஆஜராகாமல், திருமணத்தை நடத்தி வைக்கக் கூடாது. இதை பதிவு துறை அதிகாரிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.

ஒருவேளை அவர்களுக்கு, இதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், தகுந்த பாதுகாப்பினை போலீசார் வழங்க வேண்டும்.

இதுபோன்ற திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதர் தொழில் செய்யும் வக்கீல்கள் மீது ஏதாவது புகார்கள் வந்தால், அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சட்டப்படி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது இந்த உத்தரவுகளின் அடிப்படையில், இந்த ஆள் கொணர்வு மனுக்களை பைசல் செய்கிறோம்.

அண்மையில் ஐகோர்ட்டு மதுரை கிளை இளம் வக்கீல்கள், ‘சுத்தம் செய்:யுத்தம் செய்து’ என்ற குறும்படம் தயாரித்து வெளியிட்டுள்ளனர். அதில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கார், வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோர் செய்த புனிதமான வக்கீல் தொழில், திருடர்கள் கைக்கு சென்று விடக்கூடாது என்று கருத்து கூறியிருந்தனர். இந்த படத்தை பார்த்த பிறகு, இளம் வக்கீல்கள் இந்த புனித தொழிலுக்குரிய பெருமையை மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 4 வயது சிறுமி பலாத்காரம்: பள்ளி காவலாளி கைது!!
Next post போரை நிறுத்தும் வரை தாம்பத்ய உறவு இல்லை!!