போரை நிறுத்தும் வரை தாம்பத்ய உறவு இல்லை!!

Read Time:1 Minute, 41 Second

653135736sexதெற்கு சூடானில் உள்நாட்டு போரில் அரசுக்கு ஆதரவாக செயல்படும் தங்களது கணவர்களை வழிக்கு கொண்டு வர, அந்த நாட்டு பெண்கள் புது, ‘டெக்னிக்’கை கையாள முடிவு செய்துள்ளனர்.

தெற்கு சூடானில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எண்ணற்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20 லட்சத்துக்கும் அதிகமானோர், பக்கத்து நாடுகளுக்கு அகதிகளாக சென்று விட்டனர்.

ஐ.நா அமைத்துள்ள அகதிகள் முகாமில் 1 லட்சம் பேர் தங்கி உள்ளனர். சூடானில் அமைதியை கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன.

இந்த நிலையில் அங்கு அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக அந்நாட்டு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பெண்கள் தீவிர ஆலோசனை நடத்தினர். போரை நிறுத்தும் வரை, சூடான் பெண்கள் யாரும் தங்கள் கணவருடன் தாம்பத்ய உறவு கொள்ளக் கூடாது என்று முடிவு செய்துள்ளனர்.

ஐ.நா முயற்சியே தோல்வி கண்டுள்ள நிலையில், சூடான் பெண்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரகசிய திருமணம் செய்து வைக்கும் வக்கீல்கள் மீது நடவடிக்கை!!
Next post மோதும் நாடுகளுக்கே கள்ள சந்தையில் கச்சா எண்ணெய் விற்று செய்து பணம் பார்க்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.!!