வீரியம் – பாரம்பரிய பயிர்களைப் பாதுகாக்கும் திட்டம்!!
அதிக நீர்ப்பாசனம் தேவைப்படும் கலப்பினங்களை மாத்திரம் முற்றுமுழுதாக நம்பியிராமல் வரட்சிக்குத் தாக்குப்பிடிக்கக் கூடிய பாரம்பரியப் பயிரினங்களுக்கு நாம் மீளவும் திரும்பவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று, வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
அழிந்துவரும் பாரம்பரியப் பயிரினங்களைப் பாதுகாக்கவென வடக்கு விவசாய அமைச்சால் ´வீரியம்´ எனும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை (23) முழங்காவில் ஜெயபுரம் வடக்கு பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விவசாயிகளுக்குப் பாரம்பரியப் பயிரினங்களின் விதைகளை வழங்கி வைத்து உரையாற்றும்போது அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அதிகளவு இரசாயன உரங்களும், பூச்சிகொல்லி மருந்துகளும் கலப்பினங்களை விளைவிக்கப் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் மோசமாகப் பாதிக்கப்படுவதோடு, உணவில் கலக்கும் இரசாயனங்களின் மூலம் நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது.
இதனால், கலப்பு இனப் பயிர்களுக்குப் பதிலாகச் செயற்கை இரசாயனங்களைப் பயன்படுத்தாத இயற்கை வேளாண்மையை உலகநாடுகள் ஊக்குவிக்க ஆரம்பித்துள்ளன.
இயற்கை அல்லது சூழலியல் விவசாயத்துக்குக் கலப்பினப் பயிர்களைவிட பாரம்பரியப் பயிரினங்களே மிகவும் பொருத்தமானவை. இதனால் வழக்கொழிந்து அழிந்து போய்க்கொண்டிருக்கும் பாரம்பரிய இனங்களை மீட்டெடுத்து மீளவும் பயிரிடவேண்டிய தேவை எழுந்துள்ளது.
அதனாலேயே, நோய்நொடிக்கு ஆளாகாமல் எமது மண்ணில் வீரியத்துடன் வளரக்கூடிய பாரம்பரியப் பயிரினங்களைப் பாதுகாக்கும் ´வீரியம்´ என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
வீரியம் திட்டத்தில் நாம் விவசாயிகளுக்கு இலவசமாகப் பாரம்பரியப் பயிர்களின் விதைகளை வழங்கினால், அறுவடையின் பின்னர் விவசாயிகள் எமக்கு இரட்டிப்பு மடங்கு விதைகளைத் தரவேண்டும்.
இந்த விதைகளை நாம் வேறு விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் விரைவிலேயே பாரம்பரிய இனங்களை மீட்டெடுத்துப் பெருமளவில் பெருக்கமுடியும் என்றும் தெரிவித்தார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating