சுசீந்திரம் பெயிண்டர் கொலை: மனைவி–மைத்துனர்கள் கைது!!

Read Time:5 Minute, 34 Second

794f54d2-2087-4fd5-a029-8ffc8cc51a72_S_secvpfஅஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் மனோகுமார் (வயது 38). பெயிண்டர். இவரது மனைவி ஜெயச்சந்திர பாமா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஜெயச்சந்திர பாமா கோபித்துக்கொண்டு சொத்தவிளையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

அதன்பிறகு மனோகுமார் வெளியூருக்கு வேலைக்கு சென்றார். தீபாவளியை யொட்டி சொந்த ஊருக்கு வந்த அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க ஆசை வந்தது.

கடந்த 20–ந் தேதி சொத்தவிளைக்கு சென்று மனைவி, குழந்தைகளை அழைத்து வருவதாக தனது தந்தையிடம் கூறி விட்டு மனோகுமார் மோட்டார்சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் மனோகுமாரை தேடி சொத்தவிளைக்கு வந்தனர்.

அங்கு மாமியார் வீட்டு அருகே உள்ள தென்னந்தோப்பில் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் மனோகுமார் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து மனோகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் மனோகுமாரை அவரது மனைவி ஜெயச்சந்திர பாமா மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

மனைவி, குழந்தைகளை அழைத்து வருவதாக புறப்பட்ட மனோகுமார் வழியில் மேலகிருஷ்ணன்புதூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துள்ளார். பின்னர் சொத்தவிளைக்கு சென்று மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் அவருடன் செல்ல ஜெயச்சந்திர பாமா மறுத்தார். இதனால் கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஜெயச்சந்திர பாமாவுக்கு ஆதரவாக அவரது தந்தை பிச்சை நாடார் (70), சகோதரர்கள் ஜெய செல்வ அருண் (28), ஜெயச்சந்திரகுமார் ஆகியோர் வந்து மனோகுமாரை கண்டித்தனர்.

தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஜெயச்சந்திர பாமா உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து மனோகுமாரை தென்னை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். இதில் மனோகுமார் துடிதுடித்து இறந்துள்ளார். உடனே 4 பேரும் தலைமறைவானது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திர பாமா, சகோதரர்கள் ஜெய செல்வ அருண், ஜெயச்சந்திரகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கைதான ஜெயச்சந்திர பாமா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே எனது கணவர் மனோகுமார் அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்து வந்தார். வேலைக்கு சரிவர செல்வது கிடையாது. குடும்பச் செலவிற்கு பணம் தராததால் எனக்கும் அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் நான் எனது தாயார் வீட்டிற்கு வந்து விட்டேன்.

சம்பவத்தன்று எனது கணவர் குடிபோதையில் சொத்தவிளைக்கு வந்து என்னிடம் தகராறு செய்தார். என்னை சரமாரியாக தாக்கவும் செய்தார். இதை எனது சகோதரர்கள் தட்டிக்கேட்டனர். அப்போது எனது கணவர், அவர்களை தாக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த எனது சகோதரர்கள் அவரை அடித்து மரத்தில் கட்டி வைத்தனர். இதில் அவர் இறந்து விட்டார். அதனால் நாங்கள் அங்கிருந்து தலைமறைவானோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கைதான ஜெய செல்வ அருண், ஜெயச்சந்திரகுமார், ஜெயச்சந்திர பாமா ஆகிய 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். ஜெயச்சந்திர பாமாவை தக்கலை ஜெயிலிலும், மற்ற இருவரையும் நாகர்கோவில் ஜெயிலிலும் அடைத்தனர்.

ஜெயச்சந்திர பாமாவின் தந்தை பிச்சை நாடார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!!
Next post காலிமுகத்திடல் கடலில் மூழ்கி காணாமல்போன இளைஞர் இறந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம்!!