ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சுரண்டப்படும் தொழிலாளர்கள்!!

Read Time:1 Minute, 28 Second

252431845Untitled-1ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலுள்ள இலங்கை, இந்தோனேஷியா, பங்களாதேஷ் மற்றும் எத்தியோப்பியா போன்ற நாட்டுத் தொழிலாளர்கள், அதிக நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கத் தவறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

15 ஐக்கிய அரபு இராஜ்ஜிய அமைச்சுகளுக்கு இது குறித்து கடிதம் அனுப்பியுள்ளபோதும், எதுவித பதிலும் கிடைக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

செப்டம்பர் மாதமளவில் அந்த அரசாங்கம் சிறிய சந்திப்பொன்றை தம்முடன் மேற்கொண்ட போதும் தொழிலாளர்கள் பற்றி எந்தவொரு விடயமும் முன்வைக்கப்படவில்லை என கண்காணிப்பகம் கூறியுள்ளது.

இலங்கை, நேபாளம், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 146,000 பெண் தொழிலாளர்கள் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ளதாக நம்பப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரனும், மனோவும் ஒரே தடாகத்தில் நீச்சலடித்தவர்களா?
Next post 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை!!