இறந்த பாட்டியிடமிருந்து 3 வருடங்களின் பின் கிடைத்த SMS : மனநிலை பாதிக்கப்பட்ட பிரித்தானிய பெண்.!!
மூன்று வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த பாட்டியுடன் சேர்த்து புதைக்கப்பட்ட அவரது கையடக்கத் தொலைபேசியிலிருந்து கிடைத்த குறுஞ்செய்தியினால் அதிர்ச்சியடைந்த யுவதி மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவின் South Shields பிரதேசத்தைச் சேர்ந்த Lesley Emerson என்பவர் தனது 59ஆவது வயதில் கடந்த 2011ஆம் ஆண்டு ஜுலை மாதம் காலமாகியிருந்தார். ஷெரி Emerson என்ற யுவதி தனது பாட்டியான Lesley Emerson மீது அதிக அன்பு வைத்திருந்தார். பாட்டியின் மரணத்தை அடுத்து இவர் மனமுடைந்து போய்விட்டார்.
Lesley Emerson காலமானதை அடுத்து அவர் பயன்படுத்திவந்த கையடக்கத் தொலைபேசியையும், சில பொருட்களும் அவருடன் சேர்த்து புதைக்கப்பட்டது. மன உளைச்சலுக்கு உள்ளான ஷெரி Emerson பாட்டியுடன் அவரது கையடக்கத் தொலைபேசியும் சேர்த்து புதைக்கப்பட்டுள்ளதால் நினைவு வந்த நேரமெல்லாம் அந்த தொலைபேசி இலக்கத்துக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். புதைக்கப்பட்ட பாட்டி அந்த குறுஞ்செய்திகளுக்கு பதில் அனுப்ப மாட்டார் என்பதை ஷெரி Emerson நன்கு அறிந்தவராவார்.
எனினும், அந்த குறுஞ் செய்திகளுக்கு பதிலொன்று பாட்டியின் கையடக்கத் தொலைபேசி இலக்கத்திடம் இருந்து 3 வருடங்களுக்குப் பின்னர் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த செய்தியில் நான் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வாசித்த ஷெரி Emerson தற்போது அதிர்ச்சியடைந்து மனநிலை பாதிக்கப்பட்டார்.
இதேவேளை காலமான ஒருவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கத்திடம் இருந்து எவ்வாறு குறுஞ்செய்தி அனுப்ப முடியும் என சம்பந்தப்பட்ட தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்திடம் விசாரித்தபோது, குறித்த இலக்கம் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படவில்லை என்பதால் அதனை புதிப்பித்து பிரிதொரு வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பதில் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஷெரி Emerson இன் குறுஞ்செய்திக்கு தற்போது அந்த இலக்கத்தைப் பயன்படுத்திவரும் நபரே பதில் அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து இதற்காக ஷெரி Emerson இன் குடும்பத்திடம் குறித்த தொலைபேசி வலையமைப்பு நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. எவ்வாறாயினும், இந்த சம்பவம் கேள்வியுற்றவர்கள் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating