ஜனாதிபதியின் தீபத்திருநாள் வாழ்த்துச் செய்தி!!

Read Time:2 Minute, 31 Second

1841978368Untitled-1இலங்கை வாழ் இந்துக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,

இந்து சமூகத்தின் உயர்ந்த சமயப் பண்டிகை தினமான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

தீபாவளிப் பண்டிகை தீயவற்றை நன்மை வெற்றி கொண்டதை குறித்து கொண்டாடப்படுகின்றது. அறியாமையை நீக்கி அறிவுடமையையும், இருளை நீக்கி ஒளியையும் வெற்றிகொள்வதை குறித்து நிற்கின்றது.

வழிபாடுகள், ஆன்மீக வணக்கங்கள் மூலம் இலங்கை வாழ் இந்துக்கள் இந்த விசேட பண்டிகையைக் கொண்டாடுவதில் உலகெங்கிலுமுள்ள இந்து மக்களுடன் இணைந்து கொள்கின்றனர்.

அறியாமையிலிருந்து எழும் தீயவற்றை வெற்றிகொள்வதற்கு அறிவுடமையையும் புரிந்துணர்வையும் அடைந்து கொண்டமைக்காக தெய்வங்களுக்கு தங்களது நன்றியை வெளிப்படுத்துமுகமாக இந்துக்கள் இன்றைய தினம் கோயில்களில் விளக்கேற்றி வீடுகளை விளக்குகளால் அலங்கரிக்கின்றனர்.

தீபாவளி பண்டிகையின் போதான சமய நடைமுறைகள் மற்றும் கொண்டாடங்கள் நாட்டில் தற்போது நிலவுகின்ற நல்லிணக்க உணர்வுக்கு இந்து சமூகத்தின் ஆர்வமும் செயல்திறனும் வாய்ந்த பங்குபற்றுகை மேலும் பெறுமதி சேர்ப்பதாக அமையும்.

இத்தீபத்திருநாள் இந்து சமயப் போதனைகளைப் பின்பற்றும் எல்லோர் மத்தியிலும் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் புரிந்துணர்வையும் கொண்டுவர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரங்குளியில் கைக்குண்டுத் தாக்குதல்!!
Next post ஷேனுகா தொடர்பில் வௌியான குற்றச்சாட்டு குறித்து பீரிஸ் கவலை!!