சியாம் கொலை: மேல் நீதிமன்றுக்கு அதிகாரம் உள்ளதா? உயர் நீதிமன்றில் விசாரணை!!

Read Time:2 Minute, 8 Second

251544926910456760law2பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கை விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவருக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு எதிர்வரும் 21ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் குழு அறிவித்துள்ளது.

சியாம் கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபரான முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 7 பேர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு முன் விசாரணை செய்வது சட்டவிரோதமானதென சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே விசாரணையில் இருந்து சந்தேகநபர்களை விடுவிக்குமாறு சட்டத்தரணி கேட்டுக் கொண்டார்.

முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த உயர் நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் குழு 21ம் திகதி மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயில் சேவை பணிப்பாளராக விஜய அமரதுங்க நியமிப்பு!!
Next post மண்ணுக்குள் புதைந்து இரு இராணுவ வீரர்கள் பலி!!