கல்லூரி மாணவியை காதலித்து உல்லாசம் அனுபவித்த வாலிபர்: போலீசில் புகார்!!

Read Time:1 Minute, 51 Second

73b2c18e-16d4-4fa3-b127-352e8ba15b6c_S_secvpfஅரக்கோணம் அருகே உள்ள அம்மனூர், அவ்வை நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்து இருந்தார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:–

நான் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறேன். அரக்கோணம், பழனிப்பேட்டையை சேர்ந்த வாலிபர் கட்டிட தொழிலாளி டில்லிபாபு (வயது 24) என்பவர் என்னை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார். என்னை திருமணம் செய்வதாக கூறி என்னுடன் பல முறை உல்லாசமாக இருந்தார்.

இதனால் நான் 2 மாத கர்ப்பிணியானேன். இதை தெரிந்து கொண்ட அவர் வலுக்கட்டாயமாக என்னை மிரட்டி கருக்கலைப்பு செய்ய வைத்து விட்டார்.

இதனால் நான் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன். தற்போது அவரை சந்தித்து என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டேன். ஆனால் அவர் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என சொல்லி மிரட்டி அனுப்பி விட்டார். ஆகவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, வாலிபர் டில்லிபாபு மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவிகள் பங்கேற்ற வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!
Next post காட்பாடியில் வாலிபருக்கு பாட்டில் குத்து!!