நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் தாய்-மகன் மாயம்!!

Read Time:1 Minute, 27 Second

271bc70e-701b-4466-aae2-cb6dcd39a996_S_secvpfமுறப்பநாடு அருகே உள்ள படுகையை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் மயிலு (வயது26). இவருக்கும் மும்பையை சேர்ந்த மனோகரன் என்பவருக்கும் திருமணமாகி 4 வயதில் சிவ சூர்யா என்ற மகன் உள்ளான். 2 ஆண்டுகளுக்கு முன்பே கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் மனம் உடைந்த மயிலு தனது குழந்தையுடன் தாய் வீடு வந்து விட்டார். இதைத்தொடர்ந்து மயிலுவின் உறவினர்கள் கடந்த 30.8.14 அன்று மனோகரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மயிலுவையும் அவரது குடும்பத்தையும் அழைத்து கொண்டு நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் வந்தனர்.

அப்போது போன் செய்து விட்டு வருவதாக கூறி சென்ற மயிலுவும் அவரது குழந்தையையும் காணவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் மயிலுவை காணவில்லை.

இதனால் அவரது தாயார் கோமு நேற்று நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன தாய் மகனை தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆலங்குளம் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை!!
Next post அமெரிக்க எமி விருதுக்கு இலங்கையின் அவலமான ‘மோதல் தவிர்ப்பு வலயம்’ பரிந்துரை!!