கூடங்குளம் அருகே கல்லூரி மாணவி கற்பழிப்பு: வாலிபருக்கு வலைவீச்சு!!

Read Time:1 Minute, 47 Second

107c73c7-0855-408c-bb3a-510e815d7ae9_S_secvpfநெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது18). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் வடக்கன்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

இவருக்கும் அந்த பகுதியில் உள்ள அடங்கார் குளம் கிராமத்தை சேர்ந்த பால்முருகன் (21) என்ற வாலிபருக்கும் காதல் மலர்ந்தது. இரண்டு பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது பால்முருகன், கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசைவார்த்தை கூறி ராணியை கற்பழித்தார்.

இந்த விபரம் ராணியின் குடும்பத்திற்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராணியும் அவரது பெற்றோரும் பால்முருகன் வீட்டிற்கு சென்று முறைப்படி திருமணம் செய்ய பேச்சு நடத்தி உள்ளனர். அப்போது பால்முருகன் திருமணம் செய்ய மறுத்து விட்டார். மேலும் பால்முருகனின் தந்தை ஆறுமுகம் ராணிக்கு கொலை மிரட்டல் விடுத்து விரட்டி உள்ளார்.

இதுகுறித்து ராணி கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பால் முருகன் மீது கற்பழிப்பு வழக்கும், அவரது தந்தை ஆறுமுகம் மீது கொலை மிரட்டல் வழக்கும் பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post சட்ட சிக்கல்கள் உள்ள ஜனாதிபதி தேர்தலை எதிர்க்கின்றோம்!!