பேயை விரட்டும் பூஜை முடிந்து வீடு திரும்பிய போது ஆட்டோ கவிழ்ந்தது: 18 பேர் காயம்!!

Read Time:2 Minute, 33 Second

eaa24f78-44ec-430f-a0fd-4e27a1d8207f_S_secvpfசேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடகுமலை மெய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று பேயை விரட்டுவதற்காக ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.

கோவிலில் வைத்து பேயை விரட்டுவதற்கான சிறப்பு பூஜை மும்முரமாக நடைபெற்றது. இந்த பூஜையில் இளம்பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். நள்ளிரவில் தொடங்கிய பூஜை இன்று அதிகாலையில் முடிந்தது.

பூஜை முடிந்தவுடன் வீட்டுக்கு செல்வதற்காக 20 பேர் அங்கிருந்து ஒரு லோடு ஆட்டோவில் தலை வாசலுக்கு புறப்பட்டு சென்றனர். லோடு ஆட்டோ தலைவாசல் மெயின்ரோட்டில் உள்ள வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

இதில் பயணம் செய்த பேளூரை சேர்ந்த தங்கம்(வயது 42), வாழப்பாடி சரோஜா(40), கள்ளக்குறிச்சி தர்மலிங்கம்(40), வாழப்பாடி மன்னாய்கன் பாளையம் சுந்தரி(26), இந்திராணி(31), சுகன்யா(21), சந்திரா(26), சிறுமி யோகேஸ்வரி(3), திருச்சி தொட்டியம் பகுதியை சேர்ந்த ஜோதி(40), ராஜமணி, சதீஷ், பெரம்பலூர் பகுதி வேம்பு, செல்லமுத்து, விமலா, பரமசிவம் உள்பட 18 பேர் காயம் அடைந்தனர்,

அவர்கள் அனைவரும் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சிலர் மேல்சிகிச்சைகாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தலைவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவிழந்து கிடந்த லோடு ஆட்டோவை அங்கிருந்து அப்புறப்படுத்தி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பேயை விரட்டி விட்டு திரும்பியபோது ஆட்டோ கவிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு BURGER 1.20 லட்சம்!!
Next post கற்பழிப்பு வழக்கில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரி கைது!!