பெல்ப்ஸ்சுக்கு 6 மாதம் தடை!!!

Read Time:2 Minute, 39 Second

177625560Michael-Phelpsஅமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் (29). இவர் 2004– 2012–ம் ஆண்டுகளுக்கு இடையே நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 22 பதக்கங்கள் பெற்றுள்ளார்.

அவற்றில் 18 தங்க பதக்கங்கள் அடங்கும். இந்த நிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 30–ந்தேதி அமெரிக்காவின் மேரி லேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பகுதியில் 83 கி.மீட்டர் வேகத்தில் கார் ஓட்டி சென்றார்.

அங்கு 48 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே கார் ஓட்ட வேண்டும். எனவே அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது அவர் மது அருந்தி விட்டு அதிவேகமாக கார் ஓட்டியது தெரிய வந்தது.

எனவே அவரை போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து அவருக்கு பிரச்சினைகள் தொடங்கின.

இவர் மது குடித்து விட்டு போதையில் கார் ஓட்டியதற்காக அவரை அமெரிக்க நீச்சல் கழகம் 6 மாதம் சஸ்பெண்டு (தற்காலிக நீக்கம்) செய்துள்ளது.

இந்த தடை அடுத்த ஆண்டு (2015) ஏப்ரல் 6–ந் திகதி வரை உள்ளது. எனவே இந்த காலங்களில் அவர் அனைத்து நீச்சல் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது.

அடுத்த ஆண்டு (2015) ஆகஸ்டு மாதம் ரஷியாவின் காஷான் நகரில் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. அதில் பங்கேற்க அவரை தேர்வு செய்ய போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது மைக்கேல் பெல்ப்சுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து நீச்சல் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக பெல்ப்ஸ் அறிவித்து இருந்தார். இருந்தும் ஏப்ரல் மாதம் நடந்த போட்டியில் பங்கேற்றார்.

இதற்கு முன்பு 2004–ம் அண்டில் மெரிலேண்டில் இதே போன்று மது அருந்தி விட்டு கார் ஓட்டியபோது போலீசிடம் சிக்கினார். அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டு 18 மாதம் நடத்தை விதிமுறை தண்டனை பெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவர் இல்லாத சமயம் மனைவியை மிரட்டி 3 லட்சம் கொள்ளை!!!
Next post நவம்பர் 10 ஸ்கைப்புக்கு மூடுவிழா?