மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்கள் பணி பகிஸ்கரிப்பு!!

Read Time:3 Minute, 32 Second

A nurse treats a victim at a hospital in Moneragalaமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளர் வாட்டுகளில் உள்ள தாதியர்களின் எண்ணிக்கையினை குறைப்பதற்கு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை புதன்கிழமை காலை முதல் அடையாள பணி பகிஸ்கரிப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஊடாக தாதிய பரிபாலகியின் அறிவுறுத்தல் பலகையில் இடப்பட்ட தாதிய கடமை தொடர்பான எழுத்துமூலமான அறிவித்தலுக்கு எதிராக எமது தாய்ச்சங்கத்தின் ஆலோசனைக்கு அமைவாக நாளை புதன்கிழமை (08-10-2014) அன்று தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை எடுக்க தீர்மானித்துள்ளது.

குறித்த அறிக்கையானது தாதியரின் நலன் சார்ந்த செயற்பாடுகளை பாதிப்பதைவிட போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் பராமரிப்பில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்துமென எமது சங்கம் கருதுவதனால் இதுபோன்ற தான்தோன்றித்தனமான முடிவுகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தாதியர்களின் ஆளணி எண்ணிக்கை கடந்த 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் இன்றுவரை வரையறுக்கப்படாத நிலையிலும் வருடாந்தம் வைத்தியசாலையில் பயன்பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அமைய கடமையில் உள்ள தாதியர்கள் மேலதிக கடமை மற்றும் விடுமுறை நாள் கடமை மூலமாக நோயாளர்களுக்கான சேவையினை வழங்கிவருகின்றார்கள்.

இவற்றினை கருத்தில் கொள்ளப்படாமல் எடுக்கப்படும் முடிவுகளை வன்மையாக எதிர்க்கின்றோம். எனவே நோயாளர்களின் பராமரிப்பை, உயிரை பணயம் வைக்கும் செயற்பாட்டிற்கு எதிராக நாம் நாளை விடுமுறை நாளில் கடமைக்கு சமூகமளிக்காது அடையாள பணி பகிஸ்கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

நாளை பகிஸ்கரிப்பின்போது அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான ஒழுங்குகளை மேற்கொள்ளமுடியாது என்பதையும் மன வேதனையுடன் தெரிவித்துக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த பணி பகிஸ்கரிப்பு தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவரின் சந்தேகம்: மனைவி மாயம்!!
Next post கணவர் இல்லாத சமயம் மனைவியை மிரட்டி 3 லட்சம் கொள்ளை!!!