பிரேத பரிசோதனை இன்றி அடக்கம் செய்யப்பட்ட சடலம் மன்னாரில் தோண்டி எடுக்கப்பட்டது!!

Read Time:4 Minute, 9 Second

160484578deth-legs2பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் அடக்கம் செய்யப்பட்ட சடலம் மன்னார் மாவட்ட நீதவான் செல்வி ஆனந்தி கனகரெட்னம் முன்நிலையில் இன்று சனிக்கிழமை காலை மன்னார் பொது மையானத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

இன்று காலை மன்னார் மாவட்ட நீதவான் செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில் சட்டவைத்திய அதிகாரி, என்.ஜ.வி.இருசானா, மன்னார் மாவட்ட வைத்திய அத்தியகட்சகர் வி.ரூபன் லெம்பேட், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரதனி அன்ரன் சிசில் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட சடலத்தை மீட்கும்பணியின் போது சடலம் 11 மணியளவில் தோண்டி எடுக்கப்பட்டது.

அண்மையில் வங்காலை மற்றும் சவுத்பார் கடற்கரையில் வெவ்வேறு தினங்களில் கரை ஒதுங்கிய இரு சடலங்களை அடையாளம் காண இரு வாரங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்து அடையாளம் காணப்படாவிட்டால் அரச செலவில் அடக்கம் செய்யுமாறு திடீர் மரண விசாரணை அதிகாரி தே.பி. சிந்தாத்துரை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 3.9.2014 அன்று சடலம் ஒன்று வங்காலை கடற்படை முகாமிலிருந்து சவுத்பார் நோக்கிய 2 கிலோ மீற்றர் தொலைவில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டு அது மன்னார் வைத்தியசாலயில் வைக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று கடந்த 15.9.2014 அன்றும் மன்னார் சவுத்பார் கடற்கரை பகுதியில் உருக்குலைந்த நிலையில் இன்னொரு சடலமும் கண்டுபிடிக்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 3.9.2014 எடுக்கப்பட்டு அடையாளம் காண வைக்கப்பட்டிருந்த சடலம் அடையாளம் காட்டப்படாத நிலையில் குறித்த சடலத்தை பிரோத பரிசோதனைக்கு பின் 24.9.2014 அன்று அரச செலவில் அடக்கம் செய்ய அனுமதிவழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இந்த சடலத்தை அடக்கம் செய்வதற்கு பதிலாக 15.9.2014 அன்றும் எடுக்கப்பட்ட இரண்டாவது சடலம் பிரோத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப்படது. இவ்விடயம் கடந்த 29.9.2014 கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் 29.9.2014 அன்று இரண்டாவது சடலத்தை மரண பரிசோதனை செய்து அரச செலவில் புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அச்சடலம் அங்கு இல்லாதது தெரியவந்தது.

இவ் விடயம் மன்னார் நீதவானின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல் அடக்கம் செய்யப்பட்ட சடலத்தை இன்று சனிக்கிழமை (4.10.2014) மீண்டும் தோண்டி வெளியில் எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளும்படி மன்னார் நீதவான் ஆனந்தி கனகரெடனம் கடந்த 2.10.2014 அன்று உத்தவிட்டதற்கு அமைவாக இன்று தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மீண்டும் மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயா விடுதலைக் கோரி இலங்கை அகதிகள் 2ஆயிரம் பேர் உண்ணாவிரதம்!!
Next post புதையல் தேடிய ஐவர் அதிகாலையில் கைது!!