தீபாவளிக்கு வெளிவராதா ஐ?
தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பின் இசை வெளியீட்டை முன்வைத்து ‘ஐ’ படத்தின் வெளியீடு தீபாவளியில் இருந்து நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘ஐ’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்தினை தயாரித்திருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தெலுங்கு பதிப்பின் இசை வெளியீடு அக்டோபர் 2-ஆம் வாரத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் தலைமையில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக ‘ஐ’ தெலுங்கு பதிப்பினை வாங்கியிருக்கும் பிரசாத், “ஜாக்கிசான் வருகை குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவு தெரிந்து விடும். பிரம்மாண்டமான விழாவாக விரைவில் நடைபெற இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களால் மேலும் எதுவும் தெரிவிக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.
மேலும், ‘ஐ’ இந்தி பதிப்பு இசை வெளியீட்டு விழாவிற்கு சில்வஸ்டர் ஸ்டலோன் வரவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அக்டோபர் 22ம் திகதி தீபாவளி வரவிருக்கும் பட்சத்தில், அம்மாதத்தின் இரண்டாம் வாரத்தில் தெலுங்கு இசை வெளியீடு, அதனைத் தொடர்ந்து இந்தி இசை வெளியீடு என்று இருக்கும் போது தீபாவளிக்கு ‘ஐ’ வெளிவர வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும், திரையரங்க விநியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களிடம் தீபாவளி படங்களுக்கு இரண்டு வாரங்கள் கழித்து, நவம்பர் 14ம் திகதி ‘ஐ’ வெளியாகும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக ‘ஐ’ தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனைத் தொடர்பு கொண்ட போது, “இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தும் முடிவாகி விடும். பெரிய பட்ஜெட் படம் என்பதால், பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டே தான் இருக்கும். அனைத்திற்கும் பதில், இன்னும் இரண்டு நாட்களில் தெரியும்” என்று கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating