ஜெயலலிதா வேறு அறைக்கு மாற்றம்!!

Read Time:6 Minute, 12 Second

1707378059jayalalitha66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறையும் ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார்.

பெண்களுக்குரிய சிறைப் பகுதியில் அறை எண். 23–ல் வி.வி.ஐ.பி. அறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். 27–ந் திகதி அந்த அறைக்கு சென்ற அவர் யாரிடமும் பேச விரும்பாமல் உள்ளார். உடனடியாக ஜாமீன் கிடைக்காததால் அவர் கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறையில் அவருக்கு மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவது போன்று உணவு வழங்கப்பட்டது. ஆனால் அதை ஜெயலலிதா சாப்பிட மறுத்து விட்டார். இதனால் அவருக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகிறது.

தனிமை சிறையில் உள்ள ஜெயலலிதா பெரும்பாலும் இளநீரை வாங்கி குடிக்கிறார். மேலும் பால், ரொட்டி வகைகளை அவருக்கு கொடுக்கிறார்கள்.

அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறை 12க்கு 18 அடி கொண்டு சிறிய அறையாகும். அது ஜெயலலிதாவுக்கு மிகவும் அசவுகரியமாக இருந்தது.

ஜெயலலிதா பயன்படுத்தும் பொருட்களை அங்கு வைக்க இட வசதி போது மானதாக இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று சிறைத்துறை அதிகாரிகளிடம் தனக்கு வேறு அறை ஒதுக்கீடு செய்து தருமாறு ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். அதை பரப்பன அக்ரஹாரா சிறைத் துறை உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் பெண்கள் வளாகப் பகுதியில் முதல் மாடியில் ஒரு அறைக்கு நேற்று ஜெயலலிதா மாற்றப்பட்டார். இந்த அறை ஏற்கனவே இருந்த அறையை விட சற்று விசாலமானது. இந்த அறை ஜெயலலிதாவுக்கு திருப்தி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அறையில் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறையில் தமிழ் டி.வி. சானல் நிகழ்ச்சிகள் பார்க்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

7–வது நாளான இன்றும் ஜெயலலிதா அமைதியாக காணப்பட்டார். யாரிடமும் அவர் ஆர்வமாக பேசவில்லை.

சிறை டாக்டர்களிடம் மட்டும் அவர் பேசினார். மற்ற நேரங்களில் அவர் டி.வி. நிகழ்ச்சிகள் பார்த்தார். இடையிடையே புத்தகங்கள் வாசித்து வருகிறார்.

ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 7–ந் திகதி பெங்களூர் ஐகோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. எனவே இன்னும் 4 நாட்களுக்கு அவர் சிறையில்தான் இருக்க வேண்டும்.

நேற்று முதல் 6–ந் திகதி வரை அரசு விடுமுறை தினங்களாகும். இந்த 5 நாட்களும் சிறை விதிப்படி, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

இதனால் ஜெயலலிதாவை பார்க்க தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்கள் எண்ணிக்கை நேற்றும், இன்றும் கணிசமாக குறைந்து காணப்பட்டது.

இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு ஜெயிலில் விதிகளுக்கு மாறாக எந்த வி.ஐ.பி.க்குரிய சலுகையும் காட்டவில்லை என்று சிறைத் துறை டி.ஐ.ஜி. ஜெய்சிம்மா கூறினார். அவர் மேலும் கூறியதாவது:–

ஜெயிலுக்குள் எல்லா கைதிகளையும் நடத்துவதை போலத்தான் ஜெயலலிதாவையும் நடத்துகிறோம். அவருக்கு எந்த விதி விலக்கும் கொடுக்க வில்லை.

அவரும் எங்களிடம் சிறப்பு சலுகை எதுவுமே கேட்கவில்லை. டாக்டர்கள் கூறி இருப்பதால் இரும்பு கட்டில் தருமாறு என்ற ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே அவர் வைத்தார். அந்த வசதியை செய்து கொடுத்துள்ளோம். மற்றபடி அவர் டி.வி. கூட கேட்கவில்லை.

சிறைக்குள் அவர் மிகவும் அமைதியாக உள்ளார். சிறைத்துறை அதிகாரிகளுடன் கண்ணியத்துடன் நடந்து கொள்கிறார். அவர் எங்களிடம் எந்த சலுகையையும் எதிர்பார்க்கவில்லை.

அவர் குறைந்த கால தண்டனை கைதி என்பதால் அவர் சிறையில் கொடுக்கும் உடையைத்தான் அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே அவர் தனது சொந்த உடைகளை அணிய அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு தினமும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்.

தினமும் சுறுசுறுப்பாக இருக்கிறார். காலையில் எல்லா நாளிதழ்களையும் படிக்கிறார். பிஸ்கட், பழ வகைகளை விரும்பி சாப்பிடுகிறார். இவ்வாறு சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெய்சிம்மா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோடிக்கு ஒபாமா கொடுத்த பொக்கிஷம்!!
Next post 5500 பேரை கொன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகள்!!