அமெரிக்காவை தாக்க தொடங்கியது எபோலா!!

Read Time:2 Minute, 20 Second

6360561ebolaமேற்கு அமெரிக்காவின் டலாஸில் ஒருவருக்கு எபோலா நோய் தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எபோலா நோய் தாக்குதலுக்கு ஆளான முதல் அமெரிக்க நபர் இவர் ஆவார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பரவிய எபோலா தொற்று நோய், பின்னர் கினியா, சியேரா லியோன், லைபீரியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் வெகமாக பரவியது. இந்த நோய்க்கு அந்த நாடுகளில் பலியானோர் எண்ணிக்கை 3000-த்தை எட்டியுள்ளது.

சர்வதேச நாடுகளிலும் இந்த நோய் பரவும் அச்சுறுத்தல் இருப்பதால் இதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை பல நாடுகள் எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து மேற்கு ஆப்பிரிக்காவிற்குப் பயணித்த ஒருவர் டலாஸுக்கு திரும்பி வந்து சில நாட்கள் கழிந்த நிலையில் அவருக்கு எபோலா நோய் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தெரிவித்த டல்லாசின் டெக்சாஸ் சுகாதார துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்தி சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக தெரிவித்தனர்.

ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் இதுவரை எபோலா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவில் எபோலா நோயுடன் நோயாளி ஒருவர் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளார்.

இதனால் நோயாளி உள்ள மருத்துவமனையில், பிற நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த நோய் தாக்காத வண்ணம் தொற்றுநோய் தடுப்புக்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கழிவறை சுத்தமில்லாததால் ரெயில் நிலைய அதிகாரி பணியிடை நீக்கம்: சதானந்த கவுடா நடவடிக்கை!!
Next post மீண்டும் திரையுலகை வலம் வரப்போகும் உலக அழகி!!