கழிவறை சுத்தமில்லாததால் ரெயில் நிலைய அதிகாரி பணியிடை நீக்கம்: சதானந்த கவுடா நடவடிக்கை!!

Read Time:1 Minute, 33 Second

7cf8069e-3d11-429a-a58a-ec59cd3ff83c_S_secvpfரெயில்வே மந்திரி சதானந்த கவுடா நேற்று குஜராத் மாநிலம் சபர்மதி ரெயில் நிலையம் சென்றார். திடீரென்று சென்ற அவர் அங்கு அலுவலகம் மற்றும் கழிவறைகளை சோதனை செய்தார். அப்போது கழிவறைகள் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் அந்த ரெயில் நிலைய அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து சதானந்த கவுடா உத்தரவிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘நான் ரெயில் நிலையங்களுக்கு சென்றால் அங்கு தூய்மைக்கு முன்னுரிமை அளித்து அலுவலகம் மற்றும் கழிவறைகளை ஆய்வு செய்கிறேன். பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று 13 லட்சம் ரெயில் ஊழியர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (வியாழக்கிழமை) இது தொடர்பாக அனைத்து ஊழியர்களும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். 3 வருடங்களில் ரெயில் பெட்டிகளில் 13 ஆயிரம் கழிவு தொட்டிகள் அமைக்கப்படும். அதன் பிறகு ரெயில் பாதைகள் அசுத்தமாக வாய்ப்பு இருக்காது’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் கருத்து முரண்பாடு – காதலா? மோதலா?
Next post அமெரிக்காவை தாக்க தொடங்கியது எபோலா!!