மோடிக்கான அமெரிக்கா விசா தடை ரத்து!!

Read Time:2 Minute, 15 Second

939994280modiமோடி விசாவுக்கான தடை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த 2002–ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் நடந்தது. அதில் 1000–க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்.

அதை தொடர்ந்து கடந்த 2005–ம் ஆண்டில் அம்மாநில முதல்–மந்திரி ஆக இருந்த நரேந்திரமோடிக்கு ‘விசா’ வழங்க அமெரிக்கா தடை விதித்தது. அதற்கான உத்தரவை முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ் தலைமையிலான அரசு பிறப்பித்தது.

இந்த நிலையில் கடந்த 2013–ம் ஆண்டில் குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு தொடர்பில்லை என கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கிடையே நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமர் ஆனார்.

அதை தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு வருகை தரும்படி ஜனாதிபதி ஒபாமா அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கொண்டு தற்போது பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்கிடையே நரேந்திரமோடிக்கு விசா வழங்க அரசு விதித்துள்ள தடையை ரத்து செய்ய ஜனாதிபதி ஒபாமா முடிவு செய்துள்ளார். இந்த தகவலை அமெரிக்க பாராளுமன்றத்தின் வெளியுறவு கமிட்டி தலைவர் எட்வர்ட் ராய்ஸ் தெரிவித்துள்ளார்.

குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திரமோடிக்கு தொடர்பில்லை என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க சட்ட விதிகளின்படி மோடி மீது கூறுப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால் அவருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலூன் மூலம் விண்வெளிக்கு பயணம்!!
Next post கத்திக்கு போட்டி ஒரு ஊர்ல இரண்டு ராஜா!!