நிர்வாண காட்சியை நினைத்து 17 வருடங்களின் பின்னும் கவலை!!
ஹொலிவூட்டின்பிரபல நடிகைகளில் ஒருவரான கேட் வின்ஸ்லெட் அவருக்கு பெரும் புகழ்தேடிக்கொடுத்த டைட்டானிக் திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்தமை குறித்து 17 வருடங்களின் பின்னரும் சங்கடத்துக் குள்ளாகுவதாக தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் கெமரூன் இயக்கி, 1997 ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் திரைப்படம்வசூலில் பெரும் சாதனை படைத்ததுடன் அப்படத்தில் நடித்த லியனார்டோ டிகெப்ரியோ, கேட் வின்ஸ்லட் ஆகியோருக்கும் பெரும் புகழை பெற்றுக்கொடுத்தது.
அப்படத்தில் ‘ரோஸ்’ பாத்திரத்தில் கேட் வின்ஸ்லெட்டை நிர்வாண கோலத்தில் ஜெக் (டி கெப்ரியோ) வரையும் காட்சியும் மிகப் பிரபலமானது.
அப்போது 21 வயது யுவதியாக இருந்த கேட் வின்ஸ்லெட், அதன்பின் ஒஸ்கார்விருது உட்பட பல விருதுகளை வென்று, ஏராளமான திரைப்படங்களில்நடித்துவிட்டார். இப்போதும் முன்னிலை நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார்.ஆனால், டைட்டானிக் படத்தில் இடம்பெற்ற அந்த நிர்வாண காட்சியை மாத்திரம்இன்னும் மறக்க முடியவில்லை.
அப்படம் வெளியாகி 17 வருடங்களாகிவிட்டபோதிலும் அக்காட்சியை கேட் வின்ஸ்லெட் மறப்பதற்கு ரசிகர்கள் விடுகிறார்களில்லையாம்.
அந்த காட்சியில் தான் தோன்றும் புகைப்படத்தின்மீது கையெழுத்திட்டு தருமாறுதான் செல்லுமிடமெல்லாம் ரசிகர்கள் கேட்கிறார்கள் எனவும் இனிமேல்அப்புகைப்படத்தின் மீது கையெழுத்திடப் போவதில்லை எனவும் கேட் வின்ஸ்லெட்கூறுகிறார்.
‘அப்படத்தில் கையெழுத்திடுமாறு மக்கள் அடிக்கடி கேட்கிறார்கள். அந்தபடத்தில் நான் கையெழுத்திட மாட்டேன். அது மிக சங்கடமாகவுள்ளது’ என அவர்தெரிவித்துள்ளார்.
கேட் வின்ஸ்லெட் நடித்தபுதிய படமான ‘டைவர்ஜென்ட்’ திரைப்படத்தின்வெளியீட்டு விழா கடந்த மாதம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொள்வற்கு கேட் வின்ஸ்லெட் சென்றவேளையிலும் அவரிடம்மேற்படி படத்தில் கையெழுத்திடமாறு கோரப்பட்டது. புல படங்களில்கையெழுத்திட்ட கேட் வின்ஸ்லெட், அந்த நிர்வாண படத்தில் மாத்திரம்கையெழுத்திட மறுத்துவிட்டார.
‘இப்படம் இன்னும் என்னை துரத்துகிறது’ என கேட் வின்ஸ்லெட் கூறினார். தற்போது 38 வயதான கேட்ஸ் வின்ஸ்லெட் 3 பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனைச் சேர்ந்த கேட் வின்ஸ்லெட் 12 வயதிலேயே தொலைக்காட்சி நாடகங்களில்நடிக்கத் தொடங்கியவர். 1994 ஆம் ஆண்டு வெளியான நியூஸிலாந்து திரைப்படமான ‘ஹீவன்லி கிரியேட்சர்ஸ்’ படம்தான் கேட் வின்ஸ்லெட் நடித்த முதல் திரைப்படம்என்பது குறிப்பிடத்தக்கது.
டைட்டானிக் திரைப்படம் அவர் நடித்த 6 ஆவது திரைப்படமாகும். அப்படத்தில் ரோஸின் (கேட்) நிர்வாண காட்சியை ஜெக் (லியனார்டோ) ஓவியமாகவரைவதாக காண்பிக்கப்பட்டாலும் அந்த ஓவியத்தை உண்மையில் வரைந்தவர் படத்தின்இயக்குநரான ஜேம்ஸ் கெமரோன். ஆப்படத்தில் கேட் வின்ஸ்லெட்டும் லியனார்டோ டிகெப்ரியோவும் இணைந்து நடித்த முதல் நடித்த முதல் காட்சி அதுதான் என ஜேம்ஸ்கெமரோன் கூறியிருந்தார். ஆவர் வரைந்த அசல் ஓவியம் 16,000 டொலர்களுக்குஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
அவரின் முதலாவது திரைப்படத்திலிருந்து 2008 ஆம் ஆண்டு வெளியான கேட்வின்ஸ்லெட்டுக்கு ஒஸ்கார் விருதை பெற்றுக்கொடுத்த ‘ரீடர்’ படம்வரை பலபடங்களில் நிர்வாணமாக தோன்றியவர் கேட் வின்ஸ்லெட். இனிமேல் தான் நிர்வாணமாகநடிக்கப்போவதில்லை என ரீடர் படம் வெளியானபின் கேட் வின்ஸ்லெட்கூறியிருந்தார்.
ஆனால் வேறெந்த படத்தையும்விட டைட்டானிக் படம் பெரும்புகழ் பெற்றதைப் போல்அப்படத்தில் நடித்த நிர்வாணக் காட்சியும் தனித்துவமாக விளங்குகிறது. ஆனால், திரையில் கோடிக்கணக்கானோர் பாரத்த அக்காட்சியை புகைப்படத்தில்பார்க்கும்போது ஏன் கேட் வின்ஸ்லெட் சங்கடப்பட வேண்டும் என சிலர் கேள்விஎழுப்பியுள்ளனர்.
1991 ஆம் ஆண்டு டார்க் சீஸன் எனும் தொலைக்காட்சி நாடகமொன்றில் நடித்தபோதுசக நடிகரான ஸ்டீவன் ட்ரெட்ரேவை சந்தித்து அவரை காதலித்தவர் கேட்வின்ஸ்லெட். 4 வருடங்களின்பின் 1995 ஆம்ஆண்டு இவர்கள் பிரிந்தனர்.
1998 ஆம்ஆண்டு திரைப்பட இயக்குநர் ஜிம் த்ரீப்லெட்டனை கேட் வின்ஸ்லெட்திருமணம் செய்துகொண்டார் இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இத்தம்பதி விவகாரத்து செய்தபின்னர், இயக்குநர் சாம் மெண்டிஸை 2003 ஆம்ஆண்டு கேட் வின்ஸ்லெட் திருமணம் செய்தார். சுhம் மெண்டிஸ் மூலம் ஆண் குழந்தைக்கு கேட் தயானார். ஆனால் 2011 ஆம் ஆண்டு இவர்கள் பிரிந்தனர்.
அதன்பின் 2011 ஆம் ஆண்டு, பிரித்தானிய கோடீஸ்வர தொழிலதிபர் ரிச்சர்ட்பிரான்ஸனின் மருமகனான நேட் ரொக்அன்ட்ரோலை சந்தித்த கேட் வின்ஸ்லெட், கடந்தவருடம் அவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு கடந்த டிசெம்பர் மாதம்ஆண் குழந்தையொன்று பிறந்தது.
Average Rating