100 கோடி அபராதத்திற்கு பதிலாக 3,000 ஏக்கர் நிலம் பறிமுதல்?

Read Time:1 Minute, 55 Second

1441607469jayalalitha-arrestedபெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சொத்துகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பெயரில் 6 நிறுவனங்கள் உள்ளன. 3 ஆயிரம் ஏக்கர் நிலமும் இருக்கிறது. கொடநாடு எஸ்டேட்டில் 900 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் அன்றைய மதிப்பு ரூ. 7.5 கோடி.

மற்ற விவசாய நிலங்கள் ஒரு ஏக்கர் ரூ.10 ஆயிரம் வீதம் வாங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ரூ. 53 கோடிக்கு ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நீதிமன்றம் முடிவு செய்து இருக்கிறது.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் நிறுவனங்களின் சொத்துக்கள் உள்ளன. இவற்றின் இன்றைய விலை நிலவரம் பல மடங்கு அதிகமாகி உள்ளது.

இதன் அடிப்படையில், ஜெயலலிதாவுக்கு 4 வருடம் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 1988–ம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு சட்டம் பிரிவு 13 (1) (இ) மற்றும் 13 (டி) ஆகிய பிரிவுகளில் 7 வருடம் சிறை மற்றும் சேர்க்கப்பட்ட சொத்து மதிப்பின் அடிப்படையில் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டு இருக்கிறது.

இதன்படி ரூ. 100 கோடி அபராதம் செலுத்தாவிட்டால் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்யவும் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகனை காட்டில் விட்டதாய் சிறையில்: பொறுப்பேற்க மறுத்த தந்தை விளக்கமறியலில்!!
Next post ஜெயா பிணை மனு 6ம் திகதிக்கு ஒத்திவைப்பு!!