விற்பனைக்கு வரும் பறக்கும் கார்கள்!!

Read Time:2 Minute, 51 Second

64622பறக்கும் கார் என்ற விடயம் சில வருடங்களுக்கு முன்பு வரையில் எதிர்காலத்துக்குரிய கண்டுபிடிப்புகளாவே இருந்தது. ஆனால் எதிர்காலம் இப்போதே என்ற வகையில் தற்போதே என மாறிவிட்டது.

அடுத்த வருட ஆரம்பம் முதல் சாரதியற்ற கார்கள் பிரித்தானிய வீதிகளில் பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு கடந்த வாரம் அறிவித்ததனையடுத்து பறக்கும் கார்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன.

சாரதியற்ற கார்களை விட அதிகளவில் மக்களை ஈர்க்கக்கூடிய பறக்கும் கார்களை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கு சில நிறுவனங்கள் தயாராகியுள்ளன. இவற்றில் பராஜெட் எனும் அதிநவீனமாக ஸ்கை ரண்ணர் எனும் பறக்கும் காரினை உருவாக்கியுள்ளது.

இக்காரானது 15 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு சுமார் 88.5 கிலோ மீற்றர் வேகத்தில் (மணிக்கு 55 மைல்) பறக்கக் கூடியது. இந்த கார் பரீட்சார்த்தமாக பறந்தது. அத்துடன இவ்விமானத்துக்கு அமெரிக்கா விமானப்போக்குவரத்து நிர்வாகத்தினால் பறக்கும் திறன்கொண்ட கார் என்ற சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த ஒரு வருடத்துக்கு மேலதிக சோதனைகள் நடத்தப்பட்டு 2015ஆம் ஆண்டிலேயே சுமார் 1.65 கோடி ரூபாவுக்கு (75 ஆயிரம் பவுண்ட்) விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை வேலொன் என்ற நிறுனத்தின பறக்கும் காரும் அடுத்த வருடம் விற்பனைக்கு வரவுள்ளது. மாவெரிக் நிறுவனத்தில் பறக்கும் கார் இப்போது 1.2 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில் டி.எப்.எக்ஸ் என்ற ஹைபிரிட் பறக்கும் கார் 4 ஆசனங்களுடன் நிலைக்குத்தாக மேலெழும்புவதுடன் தரையிறங்கவும் செய்யும் திறனுடன் அதி நவீனகரமாக உற்பத்தி செய்யப்பட்டு மேலதிக சோதனைகளும் இடம்பெற்று வருகின்றன. இவை தவிர மேலும் பல நிறுவனங்கள் தற்போது பறக்கும் கார் உற்பத்தியில் முனைப்புக் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணிரத்தினத்திற்கு NO சொன்னார்.. காரணம்?
Next post மலையாள ரசிகர்களை பகைத்துக்கொண்ட ஹன்சி!!