மயானத்தில் புதைக்கப்பட்டபின் வெளியே வர முயற்சித்த பெண்?

Read Time:3 Minute, 6 Second

710435கிறீஸ் நாட்டில் இறந்­த­தாகக் கரு­தப்­பட்ட பெண்­ணொ­ருவர் சவப்­பெட்­டியில் வைத்து புதைக்­கப்­பட்­டபின் வெளியே வர முயற்­சித்து கூக்­கு­ர­லிட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கிறீஸின் வட­ப­கு­தி­யி­லுள்ள தெஸா­லே­னிக்கி எனும் பிர­தே­சத்தில், 45 வய­தான பெண்­ணொ­ருவர் புற்­று­நோ­யினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அண்­மையில் இறந்­து­விட்­டாக மருத்­து­வர்­களால் அறி­விக்­கப்­பட்­டது. அதை­ய­டுத்து பெரைய்யா எனும் இடத்­தி­லுள்ள மயா­ன­மொன்றில் அப்­பெண்­ணினக் சடலம் புதைக்­கப்­பட்­டது.

இறு­திக்­கி­ரியை முடிந்து உற­வி­னர்கள் அனை­வரும் அங்­கி­ருந்து வெளி­யே­றிய பின்னர், அப்பெண் புதைக்­கப்­பட்ட இடத்­தி­லி­ருந்து கூக்­கு­ரல்­கேட்­ட­தா­கவும் சவப்­பெட்­டியை உடைக்க முயற்­சித்­தமை போன்ற சத்தம் கேட்­ட­தா­கவும் மயான ஊழி­யர்கள் தெரி­வித்­தனர்.

மயா­னத்­துக்கு அருகில் விளை­யா­டிக்­கொண்­டி­ரந்த சிறார்கள் சிலரும் பெண்­ணொ­ருவர் கூக்­கு­ர­லி­டு­வதை கேட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

அதன்பின் மயா­னத்­துக்கு சென்ற பலரும் இத்­த­கைய சத்­தத்தை கேட்­ட­தாக கூறிய நிலையில் பொலிஸார் அங்கு வர­வ­ழைக்­கப்­பட்டு அப்­பெண்ணின் புதை­கு­ழியை தோண்­டு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

ஆனால், அதற்­கி­டையில் ஒரு மணித்­தி­யாலம் கடந்த நிலையில் அப்பெண் இறந்த நிலை­யி­லேயே சவப்­பெட்­டியில் காணப்­பட்டார். இதனால் அப்பெண் மயக்­க­ம­டைந்த நிலையில் உயி­ருடன் புதைக்­கப்­பட்­டி­ருக்­கலாம் எனவும் பின்னர் உணர்வு திரும்பி வெளியே வர முயற்­சித்த போதிலும் அது பல­ன­ளிக்­காமல் இறந்­தி­ருக்­கலாம் எனவும் கரு­தப்­ப­டு­கி­றது.

இதனால் அப்­பெண்ணின் இறப்­புக்­கான கார­ணத்தை கண்­ட­றி­வ­தற்­கான சோத­னைகள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

ஆனால், பல்­வேறு மருத்­துவ சோத­னை­களின் பின்னரே அப்பெண் இறந்ததை உறுதிப்படுத்தியதாகவும் அவர் இறந்து பல மணித்தியாலங்கள் கடந்த நிலையில் மீண்டும் உயிருடன் எழுந்திருக்க வாய்ப்பில்லை எனவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கத்தின் சாயலில் நாய்!!
Next post கிளிமஞ்சாரோ மலையில் 5730 மீற்றர் உயரத்தில் கிரிக்கெட் விளையாடி புதிய சாதனை!!