பச்சை குத்த தடை விதித்த அரசு!!

Read Time:2 Minute, 57 Second

2004844303tatooமதசார்பற்ற நாடான துருக்கியில் தற்போது ஆட்சி செய்துவரும் ரெசெப் தையிப் எர்டோகன் தனது கடுமையான விதிமுறைகளால் அந்நாட்டை இஸ்லாம் சார்ந்த நாடாக மாற்றி வருகின்றார் என்ற குற்றச்சாட்டு எதிர்ப்பாளர்களிடையே காணப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே பள்ளிப் பெண்கள் பர்தா அணிந்துகொள்ளுவதற்கு அனுமதி அளித்ததன்மூலம் துருக்கியின் மத சார்பற்ற கொள்கைகளை அவர் அழித்து வருகின்றார் என்ற விமர்சனம் அதிகரித்தது. தற்போது பள்ளி மாணவர்கள் உடலில் பச்சை குத்திக் கொள்ளுவது, அலங்காரமாகத் துளையிட்டுக் கொள்ளுவது போன்றவற்றைத் தடை செய்து அரசு நேற்று ஒரு அறிக்கை விடுத்துள்ளது. கல்வித்துறையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையும் சர்ச்சைகளை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

பலதரப்பட்ட சமூகங்கள் சேர்ந்து காணப்படும் துருக்கியில் இத்தகைய செயல்களை கீழ்த்தரமானவை என்று பழமைவாத சக்திகள் கருதும்போதும் மதச்சார்பற்ற, நகர்ப்புற இளைஞர்கள் மத்தியில் இந்த நாகரீகப் போக்குகள் அதிகரித்தே காணப்படுகின்றன. எனவே இத்தகைய செயல்களைத் தடை செய்வது என்பது அடக்குமுறையை வெளிப்படுத்துவதாகவும், செயல்படுத்த இயலாத ஒன்றாகவும் இருக்கும் என்று எதிர்த்தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உத்தியோகபூர்வ அரசு குறிப்புகளில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் தலைக்கு சாயம் பூசிக்கொள்வது, மேக்கப் மற்றும் சிறுவர்கள் மீசை, தாடி வைத்துக்கொள்வது போன்றவையும் தடை செய்யப்பட்ட செய்கைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என்று உள்ளூர் ஊடகங்கள் நேற்று தகவல் வெளியிட்டுள்ளன.

இத்தகைய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அதிபர் எர்டோகன் துருக்கியின் பாரம்பரியப் பெருமைகளை மீட்க முனைகின்றார் என்ற எண்ணம் ஒருபுறம் வெளிப்படுத்தப்படும்போதும் கடுமையான எதிர்த்தரப்பு விமர்சனங்களையும் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்கொள்கின்றன என்பதே உண்மை நிலவரமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 வயது குழந்தை இறக்க – 5 பேருக்கு மறுபிறவி!!
Next post தாயையும் மகளையும் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது!!