(PHOTOS) உலகின் மிக அழகிய கிரிமினல் ; 114 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள கனேடிய யுவதி!!
கனடாவைச் சேர்ந்த யுவதியொருவர் உலகின் மிக அழகிய கிரிமினல் என வர்ணிக்கப்படுகிறார். குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படும் நபர்களை அதிகாரிகள் புகைப்படம் பிடித்து வெளியிடும் வழக்கம் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
இத்தகைய படங்களில் ஒன்றை பார்த்த பலர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் என நம்ப முடியாத அளவுக்கு அவரின் தோற்றம் காணப்பட்டது.
ஸ்டெஃபானி, பியோடொய்ன் எனும் யுவதி மருத்துவ தாதி மாணவியாவார். பார்வைக்கு மொடல் அழகிகள் போன்று காணப்படுகிறார்.
ஆனால், பெரும் கிரிமினல்களில் ஒருவர் அவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். கனடாவில் பல கொள்ளை, திருட்டு சம்பவங்களில் அவருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. அவர் திருடுவதற்காக உடைத்து உட்புகுந்த வீடுகளின் எண்ணிக்கை 42. மொத்தமாக 114 குற்றச்சாட்டுகள் ஸ்டெஃபானி மீது பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இவ்வளவு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஸ்டெஃபானிக்கு இப்போதுதான் 21 வயது. அவரின் புகைப்படம் கனடாவின் மொன்ட்ரீயலை தளமாகக் கொண்ட பத்திரிகையயொன்றில் வெளிவந்ததையடுத்து உலகின் பல பாகங்களில் அறியப்பட்ட நபர்களில் ஒருவராகிவிட்டார் ஸ்டெஃபானி.
பார்ப்பதற்கு அப்பாவி போல் தோன்றும், ஸ்டெஃபானி, திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபடும் குழுவொன்றின் தலைவி என்கின்றனர் கனேடிய அதிகாரிகள்.
ஆட்களற்ற வீடுகளை தருணம் பார்த்து உடைத்து உட்புகுந்து பொருட்களை திருடுவது இக்குழுவின் வழக்கமாம். இவரின் சகாக்களில் பலர் பதின்மர் வயதானவர்கள் எனத் தெரிவிக் கப்படுகிறது.
கடந்த திங்கட் கிழமை ஸ்டெஃபானி மீது மேலும் 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்ப ட்டன.
சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த தாகவும் ஸ்டெஃபானி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெஃபானியின் மனநிலையை மருத்துவர்கள் பரிசோதிக்கவுள்ளதாக அவரின் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஸ்டெஃபானி, கடற்கரையொன்றில் நீச்சலுடையுடன் சூரிய குளியலில் ஈடுபடும்போது பிடிக்கப்பட்ட பழைய புகைப்படமொன்றை கனேடிய பத்திரிகையொன்று இணையத்தளத்தில் வெளியிட்டது.
அதைப் பார்த்த இளைஞர்கள் பலர் மனம் குழம்பிப் போனார்கள். “இவள் என் இதயத்தை எப்போதும் திருடிவிடக்கூடும்’ என ஒருவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தன் மீதான சில வழக்குகளை எதிர்கொள்வதற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி நீதிமன்றில் மீண்டும் ஸ்டெஃபானி ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating