ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய மொடலுக்கு வாழ்க்கைத் துணை கிடைக்காமையால் வேதனை!!

Read Time:5 Minute, 10 Second

699840ஆணாக இருந்து பெண்ணாக மாறிய மொடலிங் துறையில் புகழ்பெற்ற ஐசிஸ் கிங், தனக்கு காதலர் ஒருவரை தேடிக்கொள்ள முடியாதிருப்பதாக கவலையடைந்துள்ளார்.
28 வயதான ஐசிஸ் கிங், ‘அமெரிக்காஸ் நெக்ஸ்ட் டொப் மொடல்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர். அவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக பாலின மாற்றம் செய்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பல்வேறு ஆடை நிறுவனங்களுக்கு அவர் மொடலாக பணியாற்றியுள்ளார். நியூ யோர்க் பெஷன் ஷோ உட்பட முக்கிய பெஷன் ஷோ பலவற்றில் அவர் பங்குபற்றியுள்ளார்.
மொடலிங் தொழிற் துறையில் அவர் வெற்றிகரமாக விளங்கினாலும் தனது சொந்த வாழ்க்கை சோகமானதாகவே இருக்கிறது என்கிறார் ஐசிஸ் கிங்.

ஐசிஸ் தனது வெற்றியை பகிர்ந்துகொள்ள துணையொன்றை தேடுகிறார். ஓர் ஆணை திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டும் என்பது அவரின் ஆசை.

ஆனால், தன்னை உண்மையாக நேசிக்கும் ஒருவரை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது என ஐசிஸ் கூறுகிறார்.நியூயோர்க்கைச் சேர்ந்த ஐசிஸ் கிங், ஆணாகப் பிறந்தபோதிலும் 4 வயதிலேயே ஏனைய சிறுவர்களைவிட தான் வித்தியாசத்தை உணர்ந்ததாக அவர் கூறுகிறார்.

“நான் ஆணாகப் பிறந்துவிட்டதால் பெண்ணாக மாறியபோதிலும் எனது வாழ்க்கை கடினமானதாக உள்ளது. என்னை காதலிக்கக்கூடிய ஆண்களிடம் அனைத்து உண்மைகளையும் கூறிவிட வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால், இது குறித்து நான் கூறியவுடன் அவர்கள் என்னில் ஆர்வமிழந்து விடுகின்றனர்.

நான் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய ஒருவர் மாத்திரமல்ல. இந்த உலகில் பால் மாற்றம் செய்துகொண்டவர்களில் மிகப் பிரபலமான ஒருவரும்கூட. ஆனால் என்னை உண்மையாக நேசிப்பவர் களைக் கண்டறிவது சிரமமாக உள்ளது” என ஐசிஸ் கிங் தெரிவித்துள்ளார்.

5 அடி 7 அங்குல உயரமான ஐசிஸ் கிங், பாடசாலையிலிருந்து வெளியேறும் போது ஒருபாலின சேர்க்கை விரும்பியாக அறியப்பட்டிருந்தார். ஆனால், அந்த முத்திரை தனக்கு அவ்வளவு பொருத்தமானதல்ல என பின்னர் அவர் கருதினார். பின்னர் பெண்ணாக மாற விரும்பிய அவர், 2007 ஆம் ஆண்டு நியூயோர்க்கில் மருத்துவர்களுடன் ஆலோசித்து பால் மாற்றத்துக்கான ஹோர்மோன் சிகிச்சைகளை செய்துகொண்டார்.

வளைவுகள் கொண்ட அழகான உடலமைப்புடனான பெண்ணாக மாற வேண்டும் என ஐசிஸ் விரும்பினார். ஆனால், அவருக்கு இயற்கையாக மெல்லிய உடலமைப்பே இருந்தது.
699944
இதனால், தான் விரும்பிய உடலை பெற முடியாவிட்டாலும் அவரின் உடலமைப்பு மேற்குலக பெஷன் துறைக்கு பொருத்தமானதாக இருந்தது.

அதையடுத்து, மொடலிங் துறையில் கால் பதித்த ஐசிஸ் கிங் அத்துறையில் முன்னேறினார். 2008 ஆம் ஆண்டு அமெரிக்காஸ் நெக்ஸ்ட் டொப் மொடல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், அனைத்து வருடங்களிலும் பங்குபற்றியவர்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட நட்சத்திரங்காக 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கும் அழைக்கப்பட்டிருந்தார்.

தனது 23 ஆவது வயதில் அவர் பெண்ணாக மாறுவதற்கான சத்திரசிகிச்சைகளையும் செய்துகொண்டார்.”ஏனைய யுவதிகள் செய்வது எல்லாவற்றையும் நானும் செய்ய விரும்புகிறேன். தலையைக் கோதிக்கொள்கிறேன். குதிகால் உயர்ந்த பாதணிகளை அணிகிறேன்” என அவர் கூறுகிறார்.

தற்போது, தனது உடல் குறித்து ஐசிஸ் கிங் மகிழ்ச்சியடைந்தாலும் தன்னை நேசிக்கும் ஆண் ஒருவர் கிடைக்கவில்லையே என்ற கவலை அவரை வாட்டுகிறதாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செஞ்சி நர்சு கொலையில் கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண்!!
Next post மதத்தை பரப்ப மனைவிகளை மாற்றிக் கொள்ளும் தம்பதி! அமெரிக்காவில் இப்படியும் ஒரு அக்கப்போர்!!