தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!!

Read Time:2 Minute, 30 Second

dhoniகிரிக்கெட் உலகில் இந்திய அணியின் ஈடு இணையில்லாத கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் மகேந்திரசிங் தோனி. 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இவர் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றதன் மூலம் பிரபலமானார்.

அடுத்து, 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை இவரது தலைமையிலான 28 வருடத்திற்கு பிறகு இந்திய அணி பெற்றதன் மூலம் தோனியின் புகழ் உச்சிக்குப் பரவத் தொடங்கியது.

தொடர்ந்து பல ஒருநாள் போட்டிகளில் இவர் தலைமையிலான இந்திய அணி வெற்றியை பெற்றதையடுத்து, ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்தை இன்றும் தக்கவைத்து உள்ளது. தனிப்பட்ட முறையிலும், அணிக்கும் பல்வேறு சாதனைகளை பெற்றுத்தந்த இவருடைய வாழ்க்கை வரலாற்றை தற்போது படமாக்க முடிவு செய்துள்ளனர்.

பிரபல பாலிவுட் இயக்குனர் நீரஜ் பாண்டே, தோனியின் வாழ்க்கையை படமாக எடுக்க முடிவெடுத்துள்ளார். எம்.எஸ்.தோனி என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் தோனியாக ‘கை போச்சே’, ‘சுத்தேசி ரொமான்ஸ்’ ஆகிய படங்களில் நடித்த சுசாந்த் சிங் நடிக்கிறார்.

சமீபத்தில்தான் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை படமாக பாலிவுட்டில் எடுத்தனர். அதில், மேரிகோம் கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். இப்படம் பெரும் வெற்றியை பெற்றது.

இந்த வரிசையில் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்ததையடுத்து அடுத்த வருடம் இப்படம் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எங்க என்ன விட்டாலும் கரெக்டா த்ரிஷா வீட்டுக்குப் போயிடுவேன்!!
Next post செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்: இளம்பெண் புகார்!!