பெண்களுக்கு தொடர்ந்து மிஸ்டு கால் கொடுத்தால் ஜெயில்: பீகார் போலீஸ் அதிரடி!!

Read Time:1 Minute, 53 Second

085db138-b0d5-47b2-98e3-8c1a4825a2bc_S_secvpfபெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்து அவர்களுக்கு தொல்லை தரும் இளைஞர்களின் செயலை முடக்கும் வகையில் பீகார் காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அம்மாநில குற்றப்பிரிவு ஐ.ஜி. அரவிந்த் பாண்டே அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் ரெயில்வே காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பெண்களுக்கு தொடர்ந்து மிஸ்டு கால் கொடுப்பது மிக முக்கியமான பிரச்சினையாகும்.

இவ்வாறு அழைப்பு கொடுப்பது அவர்களை பயத்தில் ஆழ்த்தி அவர்களின் நிம்மதியை கெடுக்கும் என்று அந்த சுற்றறிக்கையில் ஐ.ஜி சுட்டிக்காட்டியுள்ளார். எனவே பலமுறை மிஸ்டு கால் கொடுத்தால் அந்நபரை இ.பி.கோ 354டி பிரிவின் கீழ் கைது செய்யுமாறு பாண்டே கூறியுள்ளார். ஒரு முறை அல்லது இரு முறை மட்டும் மிஸ்டு கால் கொடுப்பவர்களை கைது செய்யவேண்டாம் என்றும் பாண்டே குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பெண்களிடம் அத்துமீறி நடக்கும் வகையில் தொடர்ந்து மிஸ்டு கால் கொடுக்கும் நபரை கண்டிப்பாக தேடிப்பிடித்து கைது செய்யவேண்டும் என்று தனது சுற்றறிக்கையில் பாண்டே கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி.யில் தலித் சிறுமி கற்பழித்து கொலை!!
Next post கள்ளக்குறிச்சி: வாலிபர் கேலி செய்ததால் 10–ம் வகுப்பு மாணவி தற்கொலை!!