நிலக்கோட்டை அருகே திருமண ஆசைகாட்டி இளம்பெண் கடத்தல்!!

Read Time:2 Minute, 8 Second

e536a13f-2df0-4b99-b288-303264a0235e_S_secvpfநிலக்கோட்டை அருகே உள்ள கே.குரும்பபட்டி அய்யனார்கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி விசாலாட்சி. இவர்களது மகள் ரம்யா(வயது21). படித்துவிட்டு வீட்டு வேலைகளை கவனித்து வந்தார்.

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரி அம்மா பட்டியை சேர்ந்த திருமலைசாமி மகன் செல்லமுத்து(19). வேலை விசயமாக அய்யனார் கோவிலுக்கு வந்து சென்ற போது ரம்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டனர்.

இதனால் அவர்களிடையே காதல் மலர்ந்தது. ரம்யாவை திருமணம் செய்து கொள்வதாக செல்லமுத்து ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதில் மயங்கிய ரம்யா அவரையே திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தார்.

இந்த விசயம் பெற்றோருக்கு தெரியவரவே கண்டித்தனர். செல்லமுத்து, ரம்யாவைவிட வயதில் குறைந்தவர் என்பதால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அதனை கண்டுகொள்ளாத காதல்ஜோடி தொடர்ந்து காதலித்து வந்தனர்.

இந்நிலையில் சம்பவத் தன்று செல்லமுத்து ரம்யாவை கடத்திச்சென்று விட்டார். இதுகுறித்து ரம்யாவின் தாயார் நிலக்கோட்டை போலீசில் புகார் செய்துள்ளார். திருமணஆசைகாட்டி தனது மகளை செல்லமுத்து கடத்திச்சென்றுவிட்டார்.

எனவே எனது மகளை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியுள்ளார். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணொருவரை தீயிட்டு கொளுத்திய நபர் கைது!!
Next post செம்பட்டி அருகே 3 வயது மகளுடன் தாய் மாயம்!!