மாணவிகள் மீது ஆசிட் வீச்சு எதிரொலி: திண்டுக்கல் நகை கடைகளில் அதிரடி சோதனை!!

Read Time:2 Minute, 23 Second

8f446433-f490-4533-a5cc-06d1de9c92f7_S_secvpfமதுரை அடுத்துள்ள திருமங்கலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிகள் 2 பேர் மீது ஆசிட் வீசியதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டுமே பரவி வந்த ஆசிட் கலாச்சாரம் முதன் முதலாக தென்மாவட்டத்தில் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தென் மாவட்டங்களில் ஆசிட் பயன்பாடு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிட்டப்பட்டது.

திண்டுக்கல் நகரில் இன்று முதன்முறையாக ஆசிட் பயன்படுத்தும் பல்வேறு கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஆசிட் பயன்படுத்தும் நிறுவனங்கள், நகை கடைகள் உள்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஆர்.டி.ஓ. உத்தமன், டி.எஸ்.பி. ராமச்சந்திரன், தாசில்தார் முருகேசன், மருந்துகள் ஆய்வாளர் சேவகராஜன், இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் உள்ளிட்ட பலர் சோதனை நடத்தினர்.

இவர்கள் கடைகளில் பயன்படுத்தப்படும் ஆசிட்டின் தன்மை, அதன் வீரியம், எதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதனை யார்? வாங்கி செல்கிறார்கள்? எந்த பயன்பாட்டிற்காக வாங்கி செல்கிறார்கள்? போன்ற விவரங்களை கேட்டறிந்தனர். மேலும் சக்தி மிகுந்த அமிலங்கள் எங்கும் பயன்படுத்தப்படுகிறதா? என்றும் சோதனை நடத்தினர்.

இதுமட்டுமின்றி டிப்பாட் மெண்ட் ஸ்டோர்களில் பயன்படுத்தப்படும் அமிலங்களின் தன்மை குறித்தும் ஆராயப்பட்டது.

இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் வீரியம் மிகுந்த அமிலங்களை யாரேனும் பதுக்கி வைத்திருந்தாலோ, அனுமதி பெறாமல் விற்பனைக்கு வைத்திருந்தாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியுடன் தகராறு: தொழிலாளி தற்கொலை!!
Next post பரமத்தி வேலூர் அருகே 3 மாணவிகள் மாயம்!!