விபசார வழக்கில் மதுரை போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது!!
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் இரவில் நின்று கொண்டிருந்தார். கடலூரில் நர்சிங் படித்து வரும் இவர் பஸ்சுக்காக காத்து நின்ற போது வாலிபர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
அவர் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என பாலமுருகனிடம் கூறி உள்ளார். இதனை கேட்ட பாலமுருகன் அவருடன் சென்றார்.
மதுரை செல்லூர் பகுதிக்கு பாலமுருகனை அழைத்து சென்ற வாலிபர் அங்கு ஒரு வீட்டிற்கு கூட்டி சென்றார். அந்த வீட்டில் 2 பெண்கள் இருந்துள்ளனர். அவர்களை கண்டதும் பாலமுருகன் திடீரென அங்கிருந்து ஓட்டம் எடுத்து செல்லூர் போலீஸ் நிலையம் வந்து புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் செய்யப்படுவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு இருந்த ராதா (வயது32), கலைச்செல்வி (29) ஆகியோரையும், பாலமுருகனை அழைத்து வந்த புரோக்கர் மாரிமுத்துவையும் கைது செய்தனர்.
கைதான பெண்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் அதிர்ச்சி தரும் வகையில் போலீஸ்காரர் ஒருவரே தங்களை வீட்டில் வைத்து பாலியல் தொழில் செய்வதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து செல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி பெண்களை வைத்து விபசார தொழில் செய்ததாக எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் பாலமுருகனை கைது செய்தனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating