வத்தலக்குண்டு அருகே கோவில் மலையில் மயங்கி விழுந்த பெண்!!

Read Time:1 Minute, 47 Second

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு மலையில் சென்றாயபெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தின் 5 சனிக்கிழமைகளிலும் கூட்டம் அலைமோதும். வெளியூர் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது உண்டு.

இன்று புரட்டாசி மாதத்தில் முதல் சனிக்கிழமை ஆகும். இதையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதே போல மதுரை ஆரப்பாளையம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த ஆதீஸ்வரி, சுந்தரி, குருவம்மாள் ஆகியோர் சென்றாய பெருமாள் கோவிலுக்கு வந்தனர்.

இவர்கள் 5–வது மலையில் சென்றபோது ஆதீஸ்வரி திடீர் என மயங்கி விழுந்தார். அப்போது உடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திடீர் என பெண் பக்தர் மயங்கி கிடந்ததால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் என்னவோ ஏதோ என்று பீதியில் உறைந்தனர்.

உடனடியாக ஆதீஸ்வரி 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழில் ஒட்ட முடியாது தவிக்கும் பிசின்!!
Next post 2 வயது மகனை கொன்று கர்ப்பிணி தாய் தற்கொலை!!